Tuesday, 19 March 2013

UHDTV..!?




இணையத்தில் ஏதோ படித்துக்கொண்டிருந்த போது ‘UHDTV’ என்றொரு பதத்தை பார்த்தேன். அட ‘HDTV’ தெரியும், அதென்ன  UHDTV..!? என்ற ஆர்வம் மேலிட அதைப்பற்றி படிக்கத் தேட , ஆர்வம் கொடுக்கும் பல தகவல்கள் கிடைத்தது. அதை உங்களோடு பகிர்ந்துக் கொள்ள நினைக்கிறேன்.

Ultra-high-definition television என்பதன் சுருக்கம் ‘UHDTV’. 4K(2160p) மற்றும் 8K(4320p) ‘Pixels’ தரம் கொண்டது என்கிறார்கள். இதைப் புரிந்துக் கொள்ள டிஜிட்டல் பற்றிய சில தகவல்களை அறிந்திருக்க வேண்டும். பெரும்பாண்மையோருக்கு அவை தெரிந்திருக்கும். அல்லது இத்தளத்தை தொடர்ந்து வாசித்து வருபர்கள்  ‘அடுத்த தலைமுறை 'HD' தொழில்நுட்பம்’ என்னும் கட்டுரையைக் கடந்து வந்திருப்பதன் மூலம் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.  இல்லையெனில் தயவுசெய்து சிரமம் பார்க்காமல் ஒரு தடவை அக்கட்டுரையை படித்துவிட்டு வந்துவிடுங்கள். அப்போதுதான் மேலே சொல்லப்போகும் தகவல்களை உள்வாங்கிக் கொள்ள முடியும்.

சுருக்கமாக HDTV என்பது..
1080p - 1920×1080p (approximately 2.1 megapixels per frame)
1080i - 1920×1080i (approximately 2.1 megapixels per frame)
1440×1080i (approximately 1.6 megapixels per frame)
720p  - 1280×720p  (approximately 0.9 megapixels per frame)

[The letter "p" here stands for progressive scan while "i" indicates interlaced]

4K UHDTV என்பது ..
2160p -  3840 × 2160 (approximately 8.3 megapixels per frame)


8K UHDTV என்பது ..
4320p - 7680 × 4320 (approximately 33.2 megapixels per frame)


1080p HDTV- ஐப் போன்று பதினாறு மடங்கு (yes.. 16 times) அதிக பிக்சல்கள் கொண்டது 8K UHDTV என்கிறார்கள். ஏறக்குறைய ஒரு IMAX (15/70mm IMAX) படத்திற்கான தரம் கொண்டது என்கிறார்கள் (ஹப்பா..1?). ஒலியில்  22.2 surround sound அமைப்பு கொண்டதாம்.

4K UHDTV-ஐ  UHDTV1 என்றும்  8K UHDTV-ஐ UHDTV2 என்றும் அடையாளப் படுத்திருக்கிறார்கள்.  நொடிக்கு 24, 25, 50, 60 ,120 ஃபிரேம்கள் மாறும் தகுதிக் கொண்டது.

ஜப்பானிய நிறுவனமான ‘NHK Science & Technology Research Laboratories’ 2003-இல் இதற்கான கேமராவை வடிவமைத்து இத்தொழில்நுட்பத்தை பரிந்துறைத்தது. பல கட்ட மாறுதலுக்குப்பிறகு  2007-இல் ‘UHDTV’-க்கான  ‘SMPTE’ தரம் நிர்ணயிக்கப்பட்டது. 2015 - 2020 ஆண்டுகளுக்குள்ளாக பொது பயன்பாட்டிற்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜப்பானிலும் சீனாவிலும் 2013-2014 -க்குள்ளாக வீடுகளுக்கு வந்துவிடும் என்கிறார்கள்.

2006-இல் NHK நிறுவனம்  ‘450 inch’(11.4m) தொலைக்காட்சித் திரையில் தங்களுடைய UHDTV விடியோவை திரையிட்டு காட்டிவிட்டார்கள். (பெரும்பாண்மையாக நம் வீடுகளில் இருப்பது 21inch TV)  

Aptina Imaging, RAI, BSkyB, Sony, Samsung, Panasonic Corporation, Sharp Corporation, Toshiba போன்ற டிஜிட்டல் இமேஜிங் நிறுவனங்கள் 2008-இலிருந்து ‘UHDTV’ தொழில்நுட்பத்தில் ஈடுபடத்துவங்கிருக்கின்றன.

2011-இல் SHARP நிறுவனம் NHK-வுடன் இணைந்து ‘85inch LCD display’(7680 × 4320 pixels at 10 bits per pixel) அறிமுகப்படுத்தியது.

ஏப்ரல், 2012 -இல் NHK நிறுவனம் Panasonic-வுடன் இணைந்து ‘145inch (370 cm) display (7680 × 4320 at 60 fps)-வை அறிமுகப்படுத்திருக்கிறது. இது 33.2 million 0.417 mm square pixels தரம் கொண்டது.


மே, 2012-இல்  NHK நிறுவனம் உலகின் முதல் ‘ultra-high definition shoulder-mount camera’-வை கொண்டுவந்தது. அதே மாதம் ‘33.2 megapixel video at 120 fps’ தரத்தில் இயங்கும் கேமராவாக மேம்படுத்தப்பட்டிருக்கிறது. பெரிய திரையில் காட்சிப்படுத்தப்படுவதால் நொடிக்கு 120 ஃபிரேம்கள் என தரம் நிர்ணயித்திருக்கிறார்கள்.

2012, ஒலிம்பிக்கின் போது லண்டன் நகரத்தில் ‘15 meter wide screens’ அமைக்கப்பட்டு, போட்டிகளின் காட்சியை UHDTV பிம்பங்களாக திரையிடப்பட்டன. இச்சேவையை BBC நிறுவனம் அளித்திருக்கிறது.

மே, 2012 -இல் Sony நிறுவனம் உலகின் முதல்  ‘Consumer-Prosumer 4K 3D Projector’-ஐ அறிமுகப்படுத்திருக்கிறது.

ஆகஸ்ட், 2012-இல்  LG நிறுவனம் உலகின் முதல் ‘3D UHDTV / 4K system’ தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியது.


மேலும் பல தகவல்கள் தெரிவிக்கும் செய்தி யாதெனில்.. அடுத்த ஆண்டுக்குள்ளாக உலகின் பல நாடுகள் UHDTV ஒளிபரப்பிற்கு மாறிவிடுவார்கள் எனத் தெரிகிறது. கொரியா போன்ற நாடுகளில் கூட இவை வந்துவிடும் எனத் தெரிகிறது. பல சேட்டலைட் தொலைக்காட்சிகள் தங்கள் ஒளிபரப்பை HDTV-லிருந்து UHDTV-க்கு மாற்ற தயாராகிருக்கிறார்கள். சில தொலைக்காட்சிகள் நேரடியாக 8K UHDTV தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த நினைக்கின்றன தேவையற்ற இடைச்சொருகளாக 4K UHDTV தவிர்த்து விடுவதற்காக. எப்பூடி..!

உலகின் கதை இப்படி போய் கொண்டிருக்க.. இங்கே இந்தியாவில் என்ன கிடைக்கிறது என்பது நாம் அறிந்ததுதான்.

தொலைக்காட்சியே இப்படி என்றால், திரைப்படம் சார்ந்த தொழில்நுட்பங்கள் எங்கே போகும் என்பதைக் கற்பனைச் செய்துப்பாருங்கள். டிஜிட்டல் தொழில்நுட்பம் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கிறது. வருங்காலத்தில் எல்லா திரைப்படங்களும் 3D படங்களாக இருக்கும் மேலும் அவை IMAX படங்களாகவும் இருக்கும் என்பதாகத்தான் நினைக்கத் தோன்றுகிறது. திரையரங்கில் Projector-மூலம் திரையிடுவது போய், LCD Display-க்களாக மாறிவிடவும் சாத்தியமிருப்பதை இந்த  UHDTV தொழில்நுட்பம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

நம்ம ஊரில் இவையெல்லாம் எப்போது வரும் என்பதும் நாம் அதற்கு எப்போது தயாராகப்போகிறோம், எதிர்பார்க்கப்போகிறோம், தகுதியாக்கிக் கொள்ளபோகிறோம் என்பதெல்லாம் வருங்காலத்திற்கான புதிர்களில் ஒன்றாகக் வைப்போம். எது எப்படியோ.. இப்போதைக்கு சும்மா இதைப்பற்றி தெரிந்து வைத்துக் கொள்வோம்.  :)