Tuesday, 19 March 2013

"ஃபிள்டர்ஸ்"(Filters):



'ஃபில்டர்ஸ்'(Filters):


'ஃபில்டர்கள்'(Filters) அதன் வழியே ஊடுருவிச்செல்லும் ஒளியின் தன்மையை மாற்றப் பயன்படுகின்றன.அதன் வழிய ஊடுருவிச்செல்லும் ஒளியிலிருந்து தன் வண்ணத்தை அனுமதித்து, பிற வண்ணங்களைத் தடுக்கிறது. சிறப்பு வகை ஒளிப்பதிவிற்கோ, ஒளியின் வண்ணத்தைக்கொடுக்கும் வெப்பத்தை (color Temperature) மாற்றவோ பயன்படுகிறது. லென்ஸின் முன்பாகவோ,விளக்கின் முன்பாகவோ, ஜன்னலிலோ அல்லது கதவிலோ பயன்படுத்தப்பட்டு ஒளியை நமக்குத் தேவையானபடி மாற்றிக்கொள்கிறோம்.

'ஃபில்டர்கள்' பொதுவாக தூய்மையான கண்ணாடியால், 'ஜெல்ஸ்'(Gels) என்றழைக்கப்படும் 'பாலிஸ்ட்டரால்', 'பிளாஸ்டிக்கால்' தேவையான 'ஜெலட்டின்' கண்ணடிகளை இணைத்தும் தயாரிக்கப்படுகின்றன.


'ஃபில்டர் ஃபேக்டர்'(Filter Factor):
'ஃபில்டர்கள்'(Filters) மூலம் உட்செல்லும் ஒளியில் குறிப்பிட்ட அளவு ஒளியை 'ஃபில்டர்கள்' உருஞ்சிக்கொள்கின்றன(Light Absorption). அதாவது நம் வீடுகளில் ஜன்னல் கண்ணாடி வழியே வரும் ஒளியின் அளவு குறைந்து விடுவதுப் போல.

அதனால் நாம் ஒளிப்பதிவுசெய்யும் போது உருஞ்சிக்கொள்ளப்படுகின்ற ஒளியின் அளவைபொறுத்து 'எக்ஸ்போஷர்'(Exposure)அதிகரிக்க வேண்டியதாகிறது. ஏனெனில் அப்போதுதான் ஒளியமைப்பில் உள்ள ஒளியின் அளவோடு 'ஃபிள்டர்'-ஆல் உருஞ்சப்பட்ட ஒளியின் குறைவை நேர்செய்ய முடியும். அதிகரிக்கப்படும் கூடுதல் 'எக்ஸ்போஷர்-ஐ 'ஃபில்டர் ஃபேக்டர்' என்கிறோம்.


'ஃபில்டரின்' வகைகளும் பயன்பாடுகளும்:



'அல்ட்ரா வயலட் ஃபில்டர்'(Ultraviolet Filter (UV) - புற ஊதா): இயற்கைக் காட்சிகளை குறிப்பாக சமவெளிகளை ஒளிப்பதிவுசெய்யும் போது 'அல்ட்ரா வயலட் ஃபில்டர்' உபயோகிப்பதின் மூலம் தேவையில்லாத புற ஊதாக் கதிர்கள் படச்சுருளில் பதியும் காட்சியின் தரத்தைக் கெடுக்காமல் தடுக்கப்படுகிறது. லென்ஸின் முன் பொருத்துவதின் மூலம் லென்ஸில் கீறல் விழாமல் தடுக்க முடியும்.

HMI மற்றும் சில 'ஃபுளோரசன்ட்'(Flourescent) விளக்கில் பயன்படுத்துவதின் மூலம் அந்த விளக்கிலிருந்து வரும் தேவையற்ற UV - புற ஊதாக் கதிர்களைத் தடுக்க முடியும். 


'போலரைஸிங் ஃபில்டர்'(Polarizing Filter): கண்ணாடி, தண்ணீர் போன்ற பிரதிபலிக்கும் தன்மைகொண்ட பொருள்களிலிருந்து பிரதிபலிக்கும் காட்சிகளைத் தடுக்கப் பயன்படுகிறது. ஒளியானது பிரதிபலித்து பல திசைகளில் பரவும், 'போலரைஸிங் ஃபில்டர்' ஒளியின் இந்தத் தன்மையைத் தடுத்து ஒரே திசையில் செல்ல வைக்கும். வண்ணங்களின் அளவை அதிகரிக்கவும், நீல வானத்திலிருக்கும் (Blue Sky) நீல வண்ணத்தைக் கூட்டவும்  பயன்படுகிறது.


'நியுட்ரல் டென்சிட்டி ஃபில்டர்'(Neutral Density - ND): தன்னுள் செல்லும் ஒளியின் அளவை மட்டும் குறைத்து ஒளியின் மற்ற எந்தத் தன்மையும் மாற்றாததினால் இதனை 'நியுட்ரல் டென்சிட்டி ஃபில்டர்' என அழைக்கவைக்கிறது. லென்ஸின் அதிகமான 'அப்பார்ச்சரை'(aperture) உபயோகிக்க 'நியுட்ரல் டென்சிட்டி ஃபில்டர்' பயன்படுகிறது. குறிப்பாக பகல் நேரங்களில் ஒளிப்பதிவுசெய்யும் போது அதிகமான ஒளி இருந்தாலோ, வேகமான படச்சுருள்( Fast Film) பயன்படுத்தும் சமயங்களில் 'நியுட்ரல் டென்சிட்டி ஃபில்டர்' உபயோகப்படுத்தப்படுகிறது.


'கிராஜுவேடட் ஃபில்டர்'(Graduated Filter): தூய்மையான கண்ணாடியில் ஒரு பகுதி மட்டும் அதாவது மேலிருந்து கீழ் நோக்கிக் குறைந்து வரும் வகையில் வண்ணமோ, நியுட்ரல் டென்சிட்டி ஃபில்டரோ அமைக்கப்பட்டிருக்கும். காட்சியின் ஒரு பகுதிலிருக்கும் ஒளியைக் குறைத்தோ அல்லது வண்ணத்தைக் கூட்டியோ, குறிப்பாக வானத்தை ஒளிப்பதிவுச்செய்யும் போதுகாட்சியின் அழகை கூட்ட பயன்படுகிறது. 'கிராட் ஃபில்டர்'(Grad Filter) எனவும் அழைக்கப்படுகிறது.


'லோ கான்ரஸ்ட் ஃபில்டர்'(low-Contrast Filter): காட்சியின் வெளிச்சம் மற்றும் நிழலுக்கான விகிதத்தை(Contrast) குறைப்பதின் மூலமும், 'டிஃபுஷன் ஃபில்டர்'(Diffusion Filter) காட்சிப் பதிவில் தேவையான அளவு துள்ளியத்தைக் குறைப்பதின் மூலம் காட்சிக்கு அழகூட்டவும்,  'என்ஹன்ஸ்ஸர் ஃபில்டர்'(Enhancer Filter)- வண்ணத்தை மேம்படுத்தவும் பயன்படுவதுபோன்று 'ஃபாக் ஃபில்டர்'(Fog Filter), 'ஹாஸ் ஃபில்டர்'(Haze Filter) போன்றவை காட்சியமைப்பை அழகூட்டப் பயன்படுகின்றன.


'கலர் டெம்ப்பரேச்சர் ஃபில்டர்ஸ்'(Color Temperature Filters): ஒளியின் வண்ணத்தைக்கொடுக்கும் வெப்பத்தை(Color Temperature) மாற்றக்கூடிய தன்மைகொண்டவை, அதாவது 5500K ஒளியை 3200K ஒளியாகவோ,அல்லது எதிர்மறையாகவோ(from 3200k- 5500K)  மாற்றக்கூடிய தன்மை கொண்டது. இதன் முலம் 'டே ஃபிலிமை'(Day Film) 'டங்ஸ்டன் லைட்டில்'(Tungsten Light) உபயோகிக்கப்படுத்தமுடிவது போல, 'டங்ஸ்டன் ஃபிலிமை' 'டே லைட்டில்' உபயோகிக்க முடியும். விளக்குகளையும் மாற்றி உபயோகிக்க முடியும்.


அதிகமாகப் பயன்படும் ஃபில்டர்கள்:


#85 - 'டங்ஸ்டன் ஃபிலிமை'(Tungsten Film),'டே லைட்டில்'(Day Light) உபயோகிக்கப் பயன்படுகிறது.


#80A - 'டே ஃபிலிமை' 'டங்ஸ்டன் லைட்டில்' உபயோகிக்கப் பயன்படுகிறது.



'கலர் கரெக்ஷன் ஃபில்டர்'(Color correction Filters): ஒளியின் வண்ணங்களை மாற்ற உபயோகிக்கப்படுகிறது. தன்னுள் செல்லும் ஒளியில் தன் வண்ணத்தை மட்டும் அனுமதித்து மற்ற ஒளிகளைத் தடுப்பதின் மூலம் ஒளியின் வண்ணத்தை மாற்றுகின்றன.