பெனோரமிக் படங்கள் என்பது நம்மை சுற்றி இருக்கும் வெளியை முழுமையாக காட்ட முயற்சிப்பது. அதிக பரப்பளவைப் படத்தில் கொண்டுவர முயற்சிப்பது. 'wide shot'-க்கும் இதற்கும் வித்தியாசம் உண்டு. wide shot என்பது நாம் உபயோகிக்கும் லென்ஸைப் பொருத்துக் குறிப்பது. Panoramic Photo என்பது நீள்வாக்கில்('Horizontally') அகண்ட பரப்பளவுக் கொண்ட புகைப்படத்தைக் குறிப்பது. நாம் ஒரு இடத்தில் நின்றுக்கொண்டு சுற்றி 360 டிகிரியும் பார்த்தால் எப்படி இருக்குமோ அதை ஒரு படத்திலேயே கொண்டுவருவது. பொதுவாக நாம் எடுக்கும் படங்களில் ஒரு குறிப்பிட்ட அளவு பரப்பளவை மட்டும்தான் எடுக்கமுடியும், நாம் உபயோகிக்கும் லென்ஸின் 'ஃபோக்கல் லென்ந்தைப்' பொருத்து பரப்பளவு மாறுபடும்.
நம்மை சுற்றியிருக்கும் 360 டிகிரி பரப்பளவையும் படமாக்க வேண்டுமானால், மூன்று, நான்கு புகைப்படங்களாவது எடுக்கவேண்டும். ஒரு புகைப்படத்திற்கும் அடுத்த புகைப்படத்திற்கும் நீள்வாக்கில் தொடர்ச்சி இருக்கும் படியாக. அதாவது முதலில் ஒரு புகைப்படத்தை எடுத்துவிட்டு பின்பு கொஞ்சம் திரும்பி நின்று முந்திய புகைப்படத்தின் தொடர்ச்சியாக அடுத்த புகைப்படத்தை 'compose' செய்ய வேண்டும். இப்படி முழுமையாக 360 டிகிரி பரப்பளவையும் 'cover' செய்யும் வரை படங்கள் எடுக்கவேண்டும். இப்போது நம்மிடையே நம்மை சுற்றி இருக்கும் 360 டிகிரி பரப்பளவும் படங்களாக இருக்கிறது, ஆனால் தனித்தனி படங்களாக. இந்தப்படங்களை ஒன்றினைத்து ஒரே படமாக தருவதிற்கும் மென்பொருள்கள் உள்ளன.
அதேப்போல் நாம் ஒரு இடத்தில் நின்றுக் கொண்டு சுற்றி படமெடுப்பது என்பதும், நகராமல் ஆடாமல் எடுக்கவேண்டும் என்பதும் மிகுந்த பிராயித்தனம் படவேண்டிய ஒன்று. அதுவும் புகைப்படங்கள் ஒன்றுக்கொன்று தொடர்ச்சியாக இருக்கவேண்டும் என்பது மிகவும் கஷ்டம். இந்த பிரச்சனையை சமாளிக்க 'Tripod' இருக்கிறது. இந்த 'Tripod'-இல் கேமராவைப் பொருத்தி விட்டு படம் எடுக்கும் போது சரியாக 360 டிகிரில் ஆடாமல் படமெடுக்கமுடியும். மேலும் அந்த 'Tirpod' கொண்டு 'Horizontally' மட்டுமில்லாமல் 'Vertically' -யும் 360 டிகிரி படமெடுக்கமுடியும். அதற்கு 'Nodal Ninja Tripod' உதவுகிறது.
இப்படி எடுத்தப்படங்களை ஒரே படமாக மாற்றி தருவதிற்கு Quicktime VR’s, Hugin - Panorama photo stitcher போன்ற மென்பொருள்கள் பயன்படுகின்றன. இதில் நாம் கொடுக்கும் படங்கள் ஒன்றிக்கைப்பட்டு மேலும் கீழுமாக பார்ப்பதிற்கு வசதியாக சுட்டிகள் கொடுக்கப்படுகிறது. அல்லது மிக நீண்டப் ஒரே படமாகவும் எடுத்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.
சில Advanced Photo System (APS) கேமராக்களில் இப்படி பெனோரமிக் படங்கள் எடுப்பதிற்கு வசதிகள் உண்டு. அதாவது அந்த 'Mode'-ஐப் பயன்படுத்தும்போது முந்திய படத்தின் இறுதிபகுதி தெரியும், அதைப்பயன்படுத்தி அடுத்த படத்தினை 'compose' செய்துக்கொள்ளலாம். இப்படி மூன்று படங்களோ அல்லது நான்கு படங்களோ எடுக்கவேண்டும். பின்பு அந்த கேமராவே அந்தப்படங்களை ஒன்றினைத்து ஒரேப் படமாக தந்துவிடும். அந்தப்படங்கள் நீள்வாக்கில் நீண்டு 'Wide Format'-இல் இருக்கும்.
இந்த வசதி சில மொபைல் ஃபோனில் இருக்கும் கேமராக்களிலும் உண்டு. என்னுடைய 'Sony Ericsson W810'-இல் இந்த வசதி உண்டு. அதைப்பயன்படுத்தி நான் எடுத்த சில படங்கள் இங்கே.