நூறு கோடி பட்ஜெட்டில் விக்ரமை வைத்து ஷங்கர் ‘ஐ’ என்ற படத்தை எடுத்தாலும்
எடுத்தார். அதைப் பற்றி இணையதளத்தில் உலா வரும் செய்திகளுக்கு பஞ்சமே
இருப்பதில்லை. ஐ ஹீரோ விக்ரமை விட அதில் சில
சீன்கள் மட்டுமே பவர்ஸ்டார் பற்றி மட்டுமே அதிக அளவில் செய்திகள் வெளியாகி
ஷங்கரை டென்சனுக்கு ஆளாக்குகிறதாம். போதாக்குறைக்கு படத்தின் பட்ஜெட்
பற்றியும் சூட்டிங் பற்றியும் கூட சுடச் சுட போட்டோவுடன் செய்திகள்
வெளியாவதில் ஷங்கர் படு அப்செட் ஆக இருக்கிறாராம். இதனால் விளக்கம் அளித்தே
ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ஷங்கர்.