எல்லா
துறைகளிலும் முக்கிய கருவிகளுக்கு துணையாக சில துணைக்கருவிகள்
இருக்கின்றன. சிலச்சமயங்களில் இந்த துணைக்கருவிகள் அத்தியாவசிய
கருவிகளாகின்றன. அவைகள் இல்லாமல் செயல்பட முடியும், என்றாலும் அவற்றின்
தேவை தவிற்க முடியாததாகிறது. அப்படி படப்பிடிப்பின் போது 'கேமராவோடு'
சம்பந்தப்பட்ட சில துணைக்கருவிகளின் அறிமுகம் இங்கே.
'மேட் பாக்ஸ்'(Matte Box)
இது லென்ஸின் முன்புறம் இணைக்கப்படும். இதன் மூலம் லென்ஸில் 'கிளாரோ'(Glare) 'ஃபிலாரோ'(Lens Flare) வராமல் தடுக்க முடியும். இது 'Still Camera'வின் லென்ஸில் இருக்கும் 'லென்ஸ் ஷூட்'(Lens Hood)-ஐப் போன்றதுதான்.
இதன் பக்கங்ளில் 'French flags' எனப்படும் தகடுகள் இணைக்கப்பட்டிருக்கும், பக்கவாட்டில் இருந்து வரும் கிளரை தடுக்க. அதேப்போல் இதில் 'ஃபில்டர்ஸ்'(Filters) பொருத்த தேவையான அமைப்பும் இருக்கும்.
சில 'மேட் பாக்ஸ்கள்' கேமராவோடு பொருத்த கம்பிகள் இருக்கும். சிறிய 'மேட் பாக்ஸ்கள்' நேரடியாக லென்ஸிலேயே பொருத்திவிடலாம்.
'ஃபாலோ ஃபோக்கஸ்'(Follow focus)
இந்த கருவி லென்ஸோடு இணைக்கப்படும். சரியாக 'ஃபோக்கஸ்' செய்ய உதவும். இதில் இரண்டு 'சக்கரங்கள்' இருக்கும், ஒருமுனையில் 'பற்சக்கரமும்' மறுபுறம் கையால் சுற்றுவதிற்கு ஏதுவான சக்கரமும் இருக்கும். இர்ந்த இரண்டு சக்கரங்களும் இணைக்கப்பட்டிருக்கும். அதாவது நாம் கைச்சக்கரத்தை சுற்றும்போது பற்சக்கரமும் சுற்றி அதனோடு இணைக்கப்பட்டிருக்கும் 'லென்ஸில்' 'ஃபோக்கஸை' மாற்றும்.
அதாவது நேரடியாக லென்ஸில் ஃபோக்கஸ் மாற்றுவதைவிட இந்த கருவியைக்கொண்டு செய்யும் போது சரியாக, நேர்த்தியாக செய்யமுடியும். இதனால் இந்த கருவி ஒரு முக்கியமான கருவியாகிறது.
இந்த கருவியில் இரண்டுவகை உண்டு.
ஒன்று கையால் இயக்குவது. அதாவது இரண்டுசக்கரங்களில் ஒன்றை நாம் கையால் திருப்ப பற்சக்கரம் திரும்பும்.
இரண்டாது 'மோட்டாரின்'(Motor) துணைக்கொண்டு இயக்குவது. அதாவது லென்ஸோடு இணைக்கப்பட்டிருக்கும் பற்சக்கரத்தோடு சிறியமோட்டார் இணைக்கப்பட்டிருக்கும். இந்த மோட்டாரை இயக்க ஒரு கட்டுப்பாட்டுக்கருவி இருக்கிறது, இது 'கேபில்'(Cable) மூலமாகவோ அல்லது 'கம்பியில்லா'( Wireless Follow Focus) கருவியின் மூலமோ இணைக்கப்பட்டிருக்கும். கைக்கருவியை நாம் இயக்க மோட்டார் இயங்கி லென்ஸில் ஃபோக்கஸை மாற்றும்.
இதன் மூலம் 'ஃபோக்கஸ் செய்பவர்'(Focus Puller) கேராவின் அருகிலேயே இருக்கவேண்டும் என்பது இல்லை. கொஞ்சம் தள்ளி நின்றுகூட ஃபோக்கஸ் செய்ய முடியும். மேலும் 'steadycam shots', 'Jimi shot' போன்று கேமரா இயக்கத்திலிருக்கும்(Camera Movements) ஷாட்டுகளின் போது இது மிக அவசியமாகிறது.
'சிறிய வீடியோ மானிட்டர்ஸ்'(Videoassist)
இந்த கருவியில் சிறிய திரையும்(TV Screen), படங்களை பதிவுசெய்ய கூடிய 'Tape' அமைப்பும் இருக்கும். இந்த கருவியை கேமராவோடு 'கேபில்' மூலம் இணைத்துவிடுவதின் மூலம் கேமராவில் பதிவாகும் காட்சியின் வீடியோ பிறதியை பார்க்கலாம். இது கேமராவில் பதிவாகும் காட்சியின் தரத்துடன்(Resolution) இருக்காது, நாம் பார்ப்பதிற்கான 'Low Resulution' பிம்பமே அது. இதை நாம் 'HD' அல்லது 'DV' கேசட்டில் பதிவுசெய்துக்கொள்ளலாம்.
வழக்கமாக கேமராவோடு பெரிய திரை (Monitor or TV)மற்றும் 'VHS Cassette Recorder or DVD Recorder' இணைக்கப்பட்டிருக்கும். சிலச்சமயங்கள் இந்த பெரிய திரையை உபயோகிக்க இடமோ, சவுகரியமோ இருக்காது, மேலும் இயக்கத்திலிருக்கும் ஷாட்டுகளின் போதும் இந்த சிறிய திரைக் கருவி உபயோகிக்கப்படுகிறது.
இப்போது 'Hard Disc'-இல் சேமிக்கும் கருவியும், கேமராவோடு 'Wireless' தொழில்நுட்பத்தில் இணைக்க கூடிய திரைக்கருவிகளும் வந்துவிட்டன.
அதேபோல் கேமராவின் மீதே பொருத்தக்கூடிய 'Monitor'-உம் உண்டு. இதன் மூலம் 'ஃபோக்கஸ்' செய்பவர் கேமராவில் பதிவாகும் பிம்பத்தை பார்த்துக்கொள்ள முடிகிறது.
'ஸோல்டர் பேட்'(Shoulder Pad)
இது கேமராவின் அடிப்பகுதியில் இணைக்கப்பட்டு கேமராவை நம்முடிய தோள்களில் வைத்து படம்பிடிக்க பயன்படுகிறது. கேமராவை அப்படியே தோளில் வைப்பதிற்கும் இந்த கருவி இணைக்கப்பட்டு பிறகு வைப்பதிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. கேமரா சரியாக தோளில் பொருந்தும், கேமராவை நாம் சரியாக பிடித்து இயக்குவதிற்கு மிக சவுகரியமாக இருக்கிறது.