ஒளியமைப்பில் மிக அடிப்படையாக ஒரு முறை இருக்கிறது, குறிப்பாக நபர்களை படம்பிடிக்கும் போது பின்பற்ற வேண்டியது இது. இந்த அடிப்படையைக்கொண்டுதான் பெரும்பாலான காட்சிகள் ஒளியமைக்கப்படுகின்றன. இது 'புகைப்படத்துறையிலும்' பின்பற்றக்கூடிய ஒன்றுதான்.
Three-point lighting என்று அழைக்கப்படும் இந்த முறையை ஆதாரமாககொண்டுதான் எல்லா வகை ஒளியமைப்புகளும் செய்கிறார்கள். அதனால் அதைப்பற்றி நாம் தெரிந்துக்கொள்வது அவசியம்.
Three-point lighting என்பது வேறொன்றுமில்லை, மூன்று விளக்குகளைக்கொண்டு அல்லது மூன்று நிலைகளிலிருந்து ஒளியமைப்பது என பொருள் கொள்ளலாம்.
1. Key Light - ஆதார ஒளி
2. Fill Light - துணை ஒளி
3. Back Light - பின்புற ஒளி
1. Key Light - ஆதார ஒளி: இந்த 'Key Light' என்பது ஒரு 'Subject'-இன் ஒரு பக்கத்தில் இருந்து கொடுக்கப்படும், அதாவது ஒரு நபரின் ஒருபக்கத்திலிருந்து, இடதுபக்கம் என்று வைத்துக்கொள்வோம். இப்படி ஒரு பக்கத்திலிருந்து ஒளி படும் போது ஒருபக்கம் ஒளியூட்டப்பட்டும் அடுத்தப்பக்கம்(வலதுப்பக்கம்) நிழலும் விழும். மேலும் இந்த 'Key Light'ஆனது அந்த 'Subject'-ஐ தெளிவாக வரையறுக்கும். இந்த ஒளியே அந்த பொருளை/நபரை படம் பிடிப்பதிற்கான ஆதார ஒளியாகும்.
2. Fill Light - துணை ஒளி: இந்த 'Fill Light' என்பது 'Key Lights' உருவாகும் நிழலை குறைப்பதற்கு அல்லது முழுமையாக நீக்குவதிற்கு பயன்படுத்தப்படுகிறது. அதாவது 'Key Light'-க்கு மறுபக்கத்தில் 'Fill Light' வைக்கப்படும். இந்த 'Fill Light' ஆனது 'Key Light'-ஐ விட குறைவாக இருக்கும், மேலும் இது 'Soft Light'-ஆகவும் இருக்கும்.
3.Back Light - பின்புற ஒளி: இரண்டு ஒளிகளைக்கொண்டு ஒரு 'Subject' ஒளியூட்டப்பட்ட பிறகு, அந்த 'Subject'-ஐ அதன் பின்புலத்திலிருந்து பிரிப்பதிற்கு இந்த மூன்றாவது 'Back Light' பயன்படுகிறது. அதாவது ஒரு 'Subject'-யின் பின்புறத்திலிருந்து(Back Side) இந்த ஒளி கொடுக்கப்படுகிறது, அதனால்தான் இது 'Back Light' என அழைக்கப்படுகிறது.
'Key Light' மட்டும் |
'Fill Light' மட்டும்
|
'Back Light' மட்டும் |
மூன்றும் சேர்ந்து |
ஏன் Three-point lighting?
ஏன் இப்படி மூன்று நிலைகளிலிருந்து ஒளியமைக்கவேண்டும்? ஏன் இது ஆதார ஒளியமைப்பு முறையாக இருக்கிறது. ஏன் இது காலம்காலமாக பின்பற்றப்படுகிறது?
இந்த கேள்விக்கு பதில் தேடினால்..
இந்த முறை முதலில் 'புகைப்படத்துறையிலோ' அல்லது 'திரைத்துறையிலோ' உருவானது இல்லை, இது தோன்றியது 'மேடை நாடகத்தில்' என்கிறார்கள்.
மேடை நாடகங்களில் நடிகர்கள் தோன்றும்போது அவர்களை பின்புலத்திலிருந்து பிரிந்துக்காட்டவும், ஒரு வித 3D தோற்றம் கொடுக்கவும் இந்த முறை முதலில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது நடிகர்களுக்கு ஒருபக்கத்திலிருந்து 'Warm Light'-ம் மறுபக்கதில் 'Blue Light'-ம் பயன்படுத்தி அவர்களின் இருபக்கங்களுக்கும் சில வித்தியாசத்தை ஏற்படுத்துவதின் மூலம் ஒருவித முப்பரிமாணத்தன்னையை உருவாக்க முடிந்திருக்கிறது.
பொதுவாக நம்முடைய கண்கள் சூரிய ஒளிக்கு பழக்கப்பட்டதினால் 'Warm Light'-ஐ வெளிச்சமாகவும் 'Blue Light'-ஐ 'Shadow'-வும் புரிந்துக்கொள்ளும் என்கிறார்கள். மேலும் ஒரு பின்பக்க ஒளியைப் பயன்படுத்தி நடிகர்களை அவர்களின் பின்புலத்திலிருந்து பிரித்துக் காட்டி இருக்கிறார்கள். இந்த முறை பார்வையாளர்களுக்கு ஒருவித 'முப்பரிமாணத்தன்மையில்' பார்க்கும் அனுபவத்தை கொடுத்திருக்கிறது. ஆகையால் இந்த முறை புகைப்படத்துறை மற்றும் ஒளிப்பதிவிலும் பின்பற்றப்பட்டிருக்கிறது.
இருப்பரிமாணத்தில் முப்பரிமாணம்(3D in 2D):
ஒரு காகிதமோ அல்லது 'படச்சுருளோ'(Film) இருப்பரிமாணத்தன்மைக்கொண்டது அல்லவா. நீளம், அகலம் இரண்டு பரிமாணம் தான். 'Depth' என்று அழைக்கப்படும் மூன்றாவது பரிமாணம் கிடையாது. ஏனெனில் அதில் எப்படி 'முப்பரிமாணத்தை' கொண்டுவருவது?
ஏன் முப்பரிமாணத்தைக் கொண்டு வரவேண்டும்? ஏனெனில் நாம் பார்ப்பது எல்லாமே முப்பரிமாணத்தை தன்மைக்கொண்டதுதான், அதுதான் இயல்பு, அதை காகித்தில் ஒவியமாக கொண்டுவரும் போதுதான் அந்த ஒவியம் இயல்பாக இருக்கிறது, நம்மை ஈர்க்கிறது. அதேபோல் புகைப்படத்தில் இந்த முப்பரிமாணத்தன்மையைக் கொண்டுவரும்போதுதான் நாம் அதை அதிகமாக ரசிக்கிறோம்.
(இப்போது பயன்பாட்டிலிருக்கும் 3D தொழில்நுட்பத்தோடு(மைடியர் குட்டிசாத்தான், அவதார்) இதை இணைத்து குழப்பிக்கொள்ள வேண்டாம், இரண்டும் ஆதாரமாக ஒன்றுதான் என்றாலும், தொழில்நுட்பமாக அது வேறுவகை)
இப்படி ஒவியத்திலும் படத்திலிம் முப்பரிமாணத்தன்மையைக் கொண்டுவர 'Composition','Perspective' என பல நுணுக்கங்கள் இருந்தாலும் ஒளியைப்பயன்படுத்தி முப்பரிமாணத்தன்மையை கொண்டுவருவது என்பது மிக முக்கியமானது.
நாம் பார்க்கும் முப்பரிமாணம் என்பதிற்கு பல காரணங்கள் இருந்தாலும் அதில் முக்கியமானது ஒளியால் உருவாகும் 'Shadows' மற்றும் 'High Lights' ஆகும்.
அதாவது ஒரு பொருளின் மீது ஒளி விழும்போது அந்த பொருளில் இருக்கும் மேடுபள்ளங்களுக்கு ஏற்ப நிழலும்,மேடும் ஏற்படும் அல்லவா. அந்த நிழல்பகுதி 'Shadaow'ஆகவும் மேடுப்பகுதி 'High Light' எனவும் கொள்கிறார்கள். மற்றவை அந்த பொருளின் ஆதார உருவம்.
'Shadow' எதனால் உருவாகிறது? அங்கே ஏதோ ஒரு மேடு இருப்பதினாலயே நிழல் உருவாகும், அந்த மேட்டின் முனையில்(Curve) அதிகமாக ஒளி பிரதிபலிக்கும், இந்த அதிக ஒளிப்பகுதியைத்தான் 'High Light' என்கிறார்கள். இது ஒரு பொதுதன்மை. வேண்டுமானால் எதாவது பொருளை கவனித்துப்பாருங்கள்.
இந்த 'Shadow' மற்றும் 'High Light' தான் அந்த பொருளிலிருக்கும் மேடு பள்ளங்களை பிரித்துக்காட்டுவதின் மூலம், அந்த பொருளின் முப்பரிமாணத்தன்மை வெளிப்படக் காரணமாகிறது.
இதை அடிப்படையாக கொண்டே ஒவியத்திலும், புகைப்படத்திலும் 'Light & Shadow' பயன்படுத்துப்படுகிறது.
இதை புரிந்துக்கொள்வது Three-point lighting முறையை புரிந்துக்கொள்ள ஏதுவாக இருக்கும் என்பதனாலயே இதை இங்கே குறிப்பிட்டேன். அதே தன்மையில் தான் இந்த Three-point lighting முறையில்..
'Key Light' என்பது ஆதார ஒளியாகவும் அதனால் கொஞ்சம் 'Shadow'வும் உருவாக்கப்படுகிறது. நம் முகம் உருண்டை தன்மை என்பதினால் ஒரு பக்கம் ஒளியூட்டினால் மறுபக்கம் நிழல் உருவாகும். அதனால் முகம் 'Flat'(2D)-ஆக இல்லாமல் முப்பரிமாணத்தில் இருப்பது புலனாகிறது. ஆனால் மறுபக்கம் தெரியாது அல்லவா. அந்தப்பக்கத்தைக்காட்ட ஒளி தேவைப்படுகிறது.
இங்கே தான் இந்த 'Fill Light' பயன்படுகிறது. இது மறுபக்கத்தை வெளிப்படுத்துவதோடு அந்த பக்கத்தில் விழும் 'Shadow'-வை குறைக்கிறது. இதனால் ஒரு முகம், அதன் முப்பரிமாணத்தன்மையோடு முழுமையாக வெளிப்படுகிறது.
இந்த முறை எல்லா முப்பரிமாண பிம்பங்களையும் வெளிப்படுத்த பயன்படுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டுதான் எல்லாவகை ஒளியமைப்புகளும் ஏற்படுத்தப்படுகின்றன. அது இரவோ பகலோ, காதலோ சோகமோ, அனைத்து சூழ்நிலைகளுக்கும் இந்த விதி பின்பற்றப்படுகிறது. அதனால் இதை சரியாக புரிந்துக்கொள்வது அவசியம்.