Tuesday, 19 March 2013

D.I என்றால் என்ன?


D.I என்றால் என்ன? 
Digital Intermediate - 'டிஜிடல் இண்டர்மிடியேட்' என்பதின் சுருக்கம்தான் D.I.



வழக்கமாக திரைப்படத் தயாரிப்பில் எடிட்டிங்குக்கும்(editing), பிரிண்டிங்குக்கும்(Printing) நடுவில் நடக்கும் செயலை 'இண்டர்மீடியேட்' என்கிறோம். அதாவது இதுக்கும்(editing) அதுக்கும்(printing) இடையில் அல்லது நடுவில் என்பதை குறிக்கும் ஆங்கிலச்சொல் 'இண்டர்மீடியேட்'.


சரி இங்கு நடுவில் என்ன நடக்கிறது?. ஒரு படத்தின் எடிட்டிங் முடிந்தவுடன், ஏதேனும் visual effects இருந்தால்,அதாவது ஒரு படத்தின் மீது இன்னொரு படத்தை வரவழைப்பது(super impose), படத்தை இருட்டிற்குக் கொண்டுபோவது( Fade out), இருட்டிலிருந்து துவங்குவது (Fade In) போன்ற வேலைகள் இருந்தால் முன்பெல்லாம் ஆப்ட்டிக்கல் (optical) முறையில் செய்வார்கள். அடுத்து முக்கியமானது, பிரிண்ட் போடுவதிற்கு முன்பாக ஒளிப்பதிவாளர் நெகட்டிவில் இருக்கும் ஷாட்சுக்கு வண்ணத்தை ஒழுங்கு படுத்தவேண்டும்(color correction). இதை லேபில் (lab) 'போட்டோ கெமிக்கல்' (photo-chemical process) முறையில் செய்வார்கள். இப்போது இந்தச் செயல்களை டிஜிட்டலாகச் செய்கிறோம் அதுவே 'டிஜிட்டல் இண்டர்மிடியேட்'(Digital Intermediate).

ஆப்ட்டிக்கலில் செய்த visual effect யும், வண்ண ஒழுங்குபடுத்துதலையும் (color correction) கணினியில் செய்கிறோம். ஏனெனில் கணினியில் செய்யும் போது தரம் அதிகரிக்கிறது, வண்ண ஒழுங்குபடுத்துவதில் நிறைய சாத்தியம் கிடைகிறது. வேகமாகவும் செய்யமுடிகிறது.
கையால் படம் வரைவதிற்கும் கணினியில் வரைந்து பிரிண்ட் எடுப்பதிற்குமான வித்தியாசத்தை உணர்ந்திருப்பீர்கள்,அது போலத்தான்.  

D.I ஏன் செய்ய வேண்டும்? தேவை என்ன?.
D.I வருவதிற்கு முன்பெல்லாம் படம் எடுக்கவில்லையா? அப்போதும் நல்ல படங்கள் வந்திருக்கின்றன, அழகான ஒளிப்பதிவு இருந்திருக்கிறது. அப்படியிருக்க D.I. தேவை என்ன?. வழக்கமான 'போட்டோ கெமிக்கல்' முறையில் எந்தச் செயலின் பலனையும் உடனே பார்க்கமுடியாது, அது process செய்யப்படவேண்டும், பிரிண்ட் போட்டுத்தான் பார்க்கமுடியும், அதாவது காத்திருக்கவேண்டும்,சில சமயங்களில் மாற்றம் செய்யமுடியாமல் போகும்.ஆனால் D.I.யில் நாம் செய்யும் செயலையும், பலனையும் உடனே பார்க்கமுடியும், தேவைப்பட்டால் மாற்றங்கள் செய்யமுடியும் அதுவும் நேரம் வீணாகாமல். 

எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், புதிய தொழில்நுட்பம் என்பது அந்த வேலையை சுலபமாகவும், விரைவாகவும் செய்யவே பயன்படுகிறது.
அதே போல்தான் இது ஒரு புதிய தொழில்நுட்பம். ஒளிப்பதிவாளரும், இயக்குனரும், எடிட்டரும், இதைப்பயன்படுத்தி color correction யும், visual effects ம், CG வேலையும், விரைவாகவும், நேர்த்தியாகவும் செய்யமுடிகிறது.  

எப்படி எடிட்டிங்கை மூவியாலவிலிருந்து, ஆவிட்கு(Avid) மாற்றினோமோ அதுபோலத்தான் இதுவும்.  இன்னும் சிறிது காலத்தில் D.I. செய்யாமல் படங்கள் வராது.
செயல்முறை என்ன?.
வழக்கமாக ஒரு திரைப்படம் தயாராவது இப்படி இருக்கிறது:

சூட்டிங்கில் நீங்கள் எடுத்த நெகட்டிவை லேபில்(Lab) கொடுத்து, டெவலப்(Develope)செய்தபிறகு, அதை டெலிசினி(Telecine)செய்வார்கள். டெலிசினி என்பது பிலிமை வீடியோவாக மாற்றுவது, இப்படி டெலிசினி செய்யும் போது நெகட்டிவில் பதிக்கப்பட்டிருக்கும் keycode யையும் பதிவுசெய்துகொள்வார்கள். இந்த keycode என்பது நெகட்டிவின் நீளத்தையும், அதிலிருக்கும் ஒவ்வொரு frame யையும் குறிக்கும். இதைக் கணினியில் (Avid or FCP)ஏற்றிக்கொள்வார்கள், அதேபோல் ஸூட்டிங்கில் எடுக்கப்பட்ட ஒலியையும் கணினியில் ஏற்றிக்கொண்டு, எடிட்டிங் செய்வார்கள்.

எடிட்டிங் முடிந்தவுடன், keycode யை பயன்படுத்தி EDL எடுப்பார்கள், இந்த EDL-இல் படத்தில் நாம் பயன்படுத்தி Shots பற்றிய தகவல் இருக்கும். அதைக்கொண்டு நெகட்டிவ் கட்டிங் (Negative Cutting-மனிதர்கள் கத்திரிக்கோலைக்கொண்டு நெகட்டிவைத் துண்டிப்பது) செய்வார்கள்.  அதாவது நமக்குத் தேவையான shots-ஐ மட்டும் தனித்தனியாக மூல நெகட்டிவிலிருந்து பிரித்தெடுத்து ஒன்றாக இணைத்து முழுநீளப் படமாக உருவாக்குவார்கள். பிறகு இந்த நெகட்டிவைத்தான், வண்ண ஒழுங்கமைத்து, visual effects சேர்ப்பார்கள்,மறுபுறம் ஒலி நெகட்டிவும்(sound negative)தயாராகிவரும். இவை இரண்டையும் பயன்படுத்தி பிரிண்ட் போடுவார்கள். அந்த பிரிண்டையே நாம் தியேட்டரில் பார்க்கிறோம்.        
வழக்கமான கெமிக்கல் லேப் செயல்முறை:
இப்போது D.I. முறையில், எடிட்டிங் முடிந்தவுடன், EDL-ஐ அப்படியே கணினியில் ஏற்றிவிடுகிறார்கள்.  கணினி EDL-ஐ பயன்படுத்தி நாம் பயன்படுத்தி இருக்கும் shots-ஐ மட்டும் 2k அளவில் scan செய்து எடுத்து விடுகிறது. அவை டிஜிட்டலாக சேர்த்துவைக்கப்படுகிறது. நாம் இந்த files ல் தேவையான visual effects,CG, சேர்த்துக்கொண்டு, வண்ணத்தை ஒழுங்கமைத்துக் கொடுத்துவிட்டால், அந்த டிஜிட்டல் files யை நெகட்டிவாக மாற்றிக் கொடுத்துவிடுவார்கள். இதை நாம் sound negative வோடு சேர்த்து பிரிண்ட் போட்டுக்கொள்ளலாம்.   




வழக்கமான கெமிக்கல் லேப் செயல்முறை:



இப்போது D.I. முறையில், எடிட்டிங் முடிந்தவுடன், EDL-ஐ அப்படியே கணினியில் ஏற்றிவிடுகிறார்கள்.  கணினி EDL-ஐ பயன்படுத்தி நாம் பயன்படுத்தி இருக்கும் shots-ஐ மட்டும் 2k அளவில் scan செய்து எடுத்து விடுகிறது. அவை டிஜிட்டலாக சேர்த்துவைக்கப்படுகிறது. நாம் இந்த files ல் தேவையான visual effects,CG, சேர்த்துக்கொண்டு, வண்ணத்தை ஒழுங்கமைத்துக் கொடுத்துவிட்டால், அந்த டிஜிட்டல் files யை நெகட்டிவாக மாற்றிக் கொடுத்துவிடுவார்கள். இதை நாம் sound negative வோடு சேர்த்து பிரிண்ட் போட்டுக்கொள்ளலாம்.   

D.I செயல்முறை:



இந்த முறையில் என்ன லாபம்?.


1. மனிதர்கள் negative cutting செய்யாததினால், மூல நெகட்டிவில் எந்தவித பாதிப்பும் வராது.
2. நெகட்டிவில் கோடுகளோ, புள்ளிகளோ விழாது.
3. கலரை நம் கற்பனைக்கும்,கதைக்கும் தகுந்த மாதிரி ஒழுங்கமைக்கலாம்.
4. இயக்குனரிடமும், எடிட்டரிடமும் காட்டி, கருத்துகளைப் பெறமுடியும். அதன்மூலம் மாற்றங்களை உடனுக்குடன் செய்யமுடியும். பழைய    முறைப்படி பிரிண்ட்டுக்காகக் காத்திருக்கவேண்டாம். 
5. TV, HD, Digital Print, Negative என எந்த வகையில் வேண்டுமானாலும் நம் படத்தை வெளியிடலாம்.

D.I என்பதும் Reverse Telecine க்கும் என்ன வித்தியாசம்?
Telecine என்பது ஃபிலிமை வீடியோவாக மாற்றுவது என்று பார்த்தோம், Reverse Telecine என்பது விடியோவை ஃபிலிமாக மாற்றுவது.

ஒரு 35mm frame என்பது 2048 x 1556 pixels(நீளத்தையும், உயரத்தையும் புள்ளிகளால் குறிப்பது). டெலிசினி செய்யும் போது இதை 720 X 576 pixels-ஆகக் குறைத்து வீடியோவாக மாற்றுகிறார்கள். இது TV க்கு சரியாக இருக்கும், ஏனெனில் தியேட்டரில் பார்ப்பதைவிட TV சிறியது.
இப்போது இந்த டெலிசினி செய்த வீடியோவை Reverse Telecine மூலம் மீண்டும் ஃபிலிமில் ஏற்றினால், தியேட்டரில் பார்க்கும் போது Resulution குறைவாக தெரியும், அதாவது படம் தெளிவாக இருக்காது.  

ஆனால் D.I.யில் Scan செய்யும்போது 2048 x 1556 pixels (2K) அளவிலேயே டிஜிட்டலாக மாற்றப்படுகிறது. அதனால் மீண்டும் ஃபிலிமாக மாற்றும் போது எந்தவித குறைபாடும் வருவதில்லை. படமும் தெளிவாக இருக்கும்.