நீங்கள் பல பெயர்களைக் கேட்டிருப்பீற்கள். ARRI, ARRI-III, ARRI 435, Red One, HD, Super 16mm, Super 35mm, HDV என பல வகையான கேமராவையைப் பற்றியும் 'ஃபார்மேட்ஸ்'(Formats) பற்றியும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவற்றைப்பற்றி ஒரு அறிமுகமாக, சுருக்கமாக விவரிப்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.
முதலின் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியது மூன்று உண்டு.
1.படத்தை எதில் எடுக்கிறார்கள், அதாவது படத்தை(பிம்பத்தை) எந்த ஊடகத்தில்(Mediam) பதிவுசெய்கிறார்கள்
2.எந்த 'ஃபார்மேட்ஸ்'(Formats)
3.எந்த கேமராவைப் பயன்படுத்துகிறார்கள்.
ஊடகம்(Mediam):
இங்கே 'ஊடகம்' என்பதை பதிவுசெய்ய தேவைப்படும் கருவியாக, மூலமாக கொள்வோம். அதாவது படத்தை 'ஃபிலிம்' அல்லது 'டிஜிட்டலில்'(Digital) பதிவுசெய்யலாம்.
'ஃபார்மேட்ஸ்'(Formats):
இங்கே 'ஃபார்மேட்ஸ்' என்பதை எந்த அளவில் படத்தை(பிம்பத்தை) பதிவுசெய்கிறார்கள் என்பதைக்குறிக்கும். அதாவது ஃபிலிமில் என்றால் 35mm, 16mm, Super 16mm, Super 35mm மற்றும் 'சினிமாஸ்கோப்'(Cinemascope) போன்றவை உண்டு. 70mm, Imax என்றெல்லாம் உண்டு. அவை இங்கே பயன்படுத்தப்படுவதில்லை. எனவே இங்கே பயன்படுத்தப்படுபவையைப் பற்றி மட்டும் பார்ப்போம்.
'டிஜிட்டல்'(Digital) என்றால் HD, HDV என்றெல்லாம் உண்டு.
கேமரா:
எந்த கேமரா என்பதை முடிவுச்செய்ய நாம் முதலில் எந்த 'ஊடகம்' என்பதையும் எந்த 'ஃபார்மேட்' என்பதையும் முடிவுச்செய்ய வேண்டும்.
ஃபிலிமில் எடுக்கலாம் என்றால் எந்த 'ஃபார்மேட்' என்பதை அதாவது S16mm-லா, 35mm-லா என்பதும் 'சினிமாஸ்கோப்பா' அல்லது 'Super 35mm' என்பதையும் முடிவுச்செய்ய வேண்டும்.
S16mm, 35mm- என்பது ஃபிலிமின் அளவை(Size) குறிக்கிறது.
'சினிமாஸ்கோப்பா' என்பது அகண்ட திரையை(Wide Screen) குறிக்கிறது. அதற்கு 'அனமார்ப்பிக் லென்ஸ்'(Anamorphic Lens) பயன்படுத்தப்படுகிறது, இதில் இருக்கும் லென்ஸ் நீள்வாக்கில்(Horizantally) பிம்பத்தை சுருக்கி கொடுக்கும்.
'Super 35mm' என்பது வழக்கமான வட்டவடிவமான(spherical lenses) லென்ஸைக்கொண்டு படம் பிடிப்பது. நெகட்டிவில் ஒலி பதிவிற்கான இடத்தையும் சேர்த்து பிம்பத்தை பதிவுசெய்வது.
மேலும் விபரங்களுக்கு சினிமாஸ்கோப் vs Super 35mm கட்டுரையைப் படிக்கவும்.
'சினிமாஸ்கோப்' மற்றும் 'Super 35mm' இரண்டித்திற்கும் ஒரே கேமரா மற்றும் ஃபிலிமைத்தான் பயன்படுத்துகிறார்கள். லென்ஸில் தான் வித்தியாசம்.
Super 35mm-க்கு கேமிராவில் சில மாற்றங்கள் செய்யவேண்டும் அவ்வளவுதான்.
'டிஜிட்டல்'(Digital):
HD: 'ஹை டெஃபனிஷன்'(High Defenition) என்பதின் சுருக்கம். நாம் வழக்கமாக பயன்படுத்தும் VHS, DV, Beta, Digi Beta எல்லாம் 'SD'(Standard Defenition) வகையைச்சார்ந்தது. அதாவது இவையெல்லாம் நம்முடைய வீட்டிலிருக்கும் TV க்கு தேவையான 'பிக்சல் ரேஷியோ'(Pixal Ratio)-வான 720 x 576 pixals-இல் படத்தை பதிவுச்செய்கிறது. ஆனால் HD இன்னும் பெரிதாக 1080 pixal அளவில் பதிவுசெய்கிறது. இன்னும் விரிவாக HD-யைப்பற்றி வேறொரு கட்டுரையில் பார்க்கலாம்.
அதாரமான வித்தியாசத்தை நாம் இங்கே தெரிந்துக்கொண்டால் போதும். HD பிம்பங்கள் பெரிதாக இருப்பதினால் திரைப்படத்திற்குத்தேவையான 'Resolution' கிடைக்கிறது. இதற்கு என்று தனியாக கேமராவும், நாடாவும்(Cassette) இருக்கிறது.
HDV: HD பிம்பத்தை(Image) 'DV Cassette'-இல் பதிவுசெய்வது. இதற்கென்று தனியாக கேமரா இருக்கிறது, பதிவுசெய்ய வழக்கமான 'Mini DV Cassette' போதும்.
இங்கே பயன்படுத்தப்படும் கேமராக்கள்:
ARRI 435: இது ARRI நிறுவனத்தின் தயாரிப்பு. 435 என்பதில் 4 என்பது, இது நான்காவது தலைமுறை கேமரா என்பதைக்குறிக்கிறது.(அடுத்தடுத்த தொழில்நுட்ப வளர்ச்சியை தலைமுறை-Generation என்பார்கள்) 35 என்பது '35mm format'-ஐ குறிக்கிறது.
அதாவது ARRI 435 என்பது ARRI நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட நான்காவது தலைமுறை 35mm கேமரா. இதில் பல வகைகள் உண்டு. 435 ES, 435 Xtreme,etc.
இதே கேமராவை 'சினிமாஸ்கோப்'-க்கும் 'Super 35mm'க்கு சில மாறுதல்கள் செய்துப் பயன்படுத்தலாம்.
ARRI-III: ARRI நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மூன்றாவது தலைமுறை 35mm கேமரா. இந்த கேமராவையும் 'சினிமாஸ்கோப்'-க்கும் 'Super 35mm'க்கு சில மாறுதல்கள் செய்துப் பயன்படுத்தலாம்.
ARRI 416: என்பது ARRI நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட நான்காவது தலைமுறை 16mm கேமரா.
ARRI SR 3 -S16mm: என்பது ARRI நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மூன்றாவது தலைமுறை 16mm கேமரா.
RED ONE: என்பது 'டிஜிட்டல்' கேமரா. HD பிம்பங்களை 'Hard Disc'-இல் அல்லது 'Chip'-ல் பதிவுசெய்யும்.
ARRI D-20, D-21: இது ARRI நிறுவனத்தால் கொண்டுவரப்பட்ட HD கேமரா. HD பிம்பங்களை 'Hard Disc'-இல் பதிவுசெய்யும்.
Sony Z-1, Z-7: என்பது HDV கேமரா.
இப்படி 'Panasonic', 'JVC', மற்றும் 'Thomsan' போன்ற நிறுவனங்களின் சில கேமராக்கலும் உண்டு.