திரைப்பட
உருவாக்கத்தின் போது பல கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஒளிப்பதிவைச்சார்ந்த முக்கியமான கருவிகளான கேமரா,விளக்குகள் போன்றவற்றை
நாம் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக ஒளிப்பதிவில் கேமராவை
நகர்த்துவதற்கான அல்லது நகரும் 'subject'-ஐப் படம் பிடிப்பதற்கு என சிலக்
கருவிகள் பயன்பாட்டில் உள்ளது. அக்கருவிகளை 'Rigs' என்ற பொதுப்பெயரால் அழைக்கிறார்கள். எனினும் ஒவ்வொரு கருவிக்கும் தனித்தனிப் பெயர்கள், அதன் செயல்பாடுகளைக் கொண்டு ‘காரணப்பெயராக’ இருக்கிறது. அதில் சில கருவிகளைப் பற்றி ஒரு அறிமுகம் இங்கே.
Crane - கிரேன்: பொதுவாக நடைமுறையில் 'கிரேன்' என்றால் என்ன? உயரம் தூக்கி அல்லது பளு தூக்கி இல்லையா? அதேதான் இங்கேயும்..!.
அதேபோன்ற கருவிதான், ஆனால் சில வித்தியாசங்கள் உண்டு. நீண்ட உயரமான 'Arm' என அழைக்கப்படும் பகுதியானது செங்குத்தான ஒரு தூணில் இணைக்கப்பட்டிருக்கும். அதாவது இருப்பக்கங்களாக பிரித்து, ஒருபக்கத்தை கிழே அழுத்தினால் மறுபக்கம் மேலெழும்படியான அமைப்பு அது. நாம் விளையாட்டு திடல்களில் பார்த்திருப்போமே.. 'See-Saw' தத்துவத்தில் அமைந்தது. ஆனால் இரண்டுபக்கமும் சரிச்சமமாக பிரிக்கப்பட்டிருக்காது. ஒருபக்கம் நீண்டும், அடுத்தப்பக்கம் நீளம் குறைவாகவும் இருக்கும். நீண்டப்பகுதியின் முணையில் கேமரா,ஒளிப்பதிவாளர் மற்றும் கேமரா இயக்குபவர்/'ஃபோக்கஸ் புல்லர்' ஆகியோர் அமர்வதற்கான அமைப்பும், மறுபக்கம் அடுத்தப் பக்கத்தின் பளுவை சமன்செய்ய தேவையான 'பாரம்'(weigth) இணைப்பதற்கான அமைப்பும் இருக்கும். இந்த 'weight' என்பது இரும்பு கட்டிகளாகும். அதாவது ஒருபக்கத்தில் இருக்கும் 'கேமரா,ஒளிப்பதிவாளர் மற்றும் கேமரா இயக்குபவர்' ஆகியோரின் எடையை மறுபக்கத்தில் இரும்பு கட்டிகள் இணைப்பதன் மூலம் சமன் செய்யப்படுகிறது. அதனால் இரண்டுபக்க எடையும் நிகராகி 'Arm' என்று அழைக்கப்படும் அந்த நீண்ட பகுதி சமக்கோட்டில் இருக்கிறது.
இதனால் இப்போது ஒருபக்கத்தில் சிறு அழுத்தம்கொடுத்தாலும் அடுத்தப்பகுதி மேலெழும்பும். இப்படித்தான் ஒருபக்கத்தை அழுத்துவதன் மூலம் கேமரா இருக்கும் பக்கத்தை மேலெழுப்புகிறார்கள். மேலும் தூணோடு இணைக்கப்பட்ட பகுதி திரும்புவதற்கும் வசதியுடையது,அதனால் தேவைக்கேற்ப கேமராவை மேலே எழுப்பவும் கிழே இறக்கவும் முடிவதோடு, எந்தப்பக்கம் வேண்டுமானாலும் வலது இடது அல்லது முழுதாக '360டிகிரி'திருப்ப முடிகிறது. அதேப்போல் அந்த தூண் ஒரு அடிப்பகுதியில் இணைக்கப்பட்டு அந்த அடிப்பகுதியில் நகர்த்துவதிற்கான சக்கரங்களும் இணைக்கப்பட்டிருக்கும். இதனால் 'கிரேனை' நமக்கு தேவையானபடி தேவையான இடத்திற்கு நகர்த்திக்கொள்ள முடிகிறது.
இந்த கிரேன்கள்
தோராயணமான கணக்குபடி 12,24,40அடிகளில்(ft) இருக்கிறது. தனித்தனியாக
பாகங்களாக இருக்கும். தேவைப்படும்போது இணைத்து முழுவடிவத்தை
கொண்டுவருவார்கள்.
இப்படியான ஒரு அமைப்பைக்கொண்டு என்ன வகையான ஷாட்ஸ்(SHOTS)எடுப்பார்கள் என்று நான் சொல்லத்தான் வேண்டுமா? உங்களுக்கே தெரியும்தானே?!
Trally - டிராலி: பொதுப்பெயராக பார்த்தால் பொருள்களை ஒரு இடத்திலிருந்து இன்னொறு இடத்திற்கு நகர்த்துவதற்கு பயன்படும் சாதனத்தைக் குறிப்பது. தொழில்சாலையில் அட்டைபெட்டிகளையோ பொருட்களையோ இடமாற்றுவதற்கு பயன்படுத்தப்படுவதும், மருத்தவமனைகளில் நோயாளிகளை இடமாற்றுவதற்கு பயன்படுவதும் இந்த டிராலிகள்தான்.
இங்கேயும் அதேதான். கேமராவை இடமாற்றுவதற்கு. அதுவும் கேமரா இயங்கிக் கொண்டிருக்கும் போதே சீராக இடம் மாற்றி, நகரும் 'subject'-ஐ படம்பிடிப்பதற்கு பயன்படுகிறது.
இந்த
டிராலியானது ஒரு சதுரமான அடித்தளத்தில்(Base) 'கேமரா,ஒளிப்பதிவாளர் மற்றும்
கேமரா இயக்குபவர்' அமர்வதற்கான சிறு தூண் போன்ற அமைப்பு கொண்டது. அந்த
அடித்தளமானது சக்கரங்களைக்கொண்டது. இச்சக்கரங்கள் இரண்டு வகையில்
இருக்கும். ஒன்று வழக்கமான 'காற்று நிரப்பப்பட்ட' ஒரு அடி உயரம்கொண்ட
சக்கரங்கள். மற்றது இரயிலின் சக்கரங்களைப்போன்ற அமைப்பு கொண்டது.
இச்சக்கரங்கள் இரயிலைப்போலவே ஓடுவதற்காக சிறப்பு 'தண்டவாளம்' இருக்கிறது.
அதாவது இரண்டு இணையான ஓடுபாதை அமைப்பு அது.
இரயிலைப்போல, டிராலிக்கு தண்டவாளம் எதற்கு என்றால், அப்போதுதான் கேமராவை நகர்த்தும் போது சீராக, ஆட்டம் இல்லாமல் இருக்கும். கேமரா ஆட்டமில்லாமல்(Shake) படம்பிடிப்பது அவசியம் இல்லையா? அதனால் தான் இப்படி ஒரு அமைப்பு பயன்படுத்தப்படுகிறது.
ஐந்து அடிகளை கொண்ட தண்டவாளங்களாக பல பகுதிகள் தனித்தனியாக இருக்கும். இதை தேவைக்கு ஏற்ப ஒன்றிணைத்து நீளமாக்க முடியும். அதேபோல் வட்டவடிவ தண்டவாளங்களும் உண்டு. இதன்மூலம் 'Subject' சுற்றி 'Round Trally' ஷாட்ஸ் எடுக்கமுடிகிறது.
இந்த டிராலியில் சிறிய கிரேனை(12ft) இணைத்தும் பயன்படுத்தமுடியும். இப்போது டிராலி, கிரேனுக்கான நடுதூணாக செயல்படும்.
jimi-jib - ஜிம்மி ஜிப்: இது கிரேனின் நவினவடிவம். அதேபோல அமைப்புக் கொண்டது. ஆனால் இதில் ஆட்கள் யாரும் அமரவேண்டியது இல்லை. கேமராவை இயக்க தானியங்கி கருவிகள் உண்டு. அக்கருவிகளை, கிழே இருந்துக்கொண்டே நாம் கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பட்டு அமைப்பு இருக்கிறது.
இந்த 'ஜிம்மி ஜிப்'-ஐ நீங்கள் தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கமுடியும். ஏதேனும் நடன நிகழ்ச்சியோ,பாட்டு நிகழ்ச்சியோ அல்லது விருது வழங்கும் நிகழ்ச்சியின்போதோ நீங்கள் பார்த்திருக்கமுடியும். ஒரு நீண்ட 'Arm'-இல் கேமரா இணைக்கப்பட்டு பார்வையாளர்களின் தலைக்குமேல் செல்லுமே..! அப்போது பார்வையாளர்கள் அதை நோக்கி கைகளை ஆட்டி ஆர்ப்பரிப்பார்களே..! அதுதான் 'ஜிம்மி ஜிப்'.
இக்கருவி 'கிரேனுக்கு' மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. இதில் ஒளிப்பதிவாளர் மற்றும் கேமரா இயக்குபவர்/'ஃபோக்கஸ் புல்லர்' போன்றவர்கள் அமர வேண்டியது இல்லை என்பதனால் பாரம் குறைவாக இருக்கும். மேலும் இக்கருவியை எங்கே வேண்டுமானாலும் சுலபமாக பயன்படுத்த முடியும். தனித்தனியாக பாகங்களாக பிரித்து எடுத்துச்செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
தானியங்கி அமைப்பில் கேமரா பொருத்தப்பட்டிருப்பதால், மிக சீராக இயக்க முடியும். மேலும் கிரேனால் எடுக்க முடியாத சில ஷாட்டுகளை இதில் எடுக்க முடியும். (உ.தா) தலைக்குமேல் சுற்றுவது, மேலிருந்து கிழே இறங்கி 'subject'-ஐ சுற்றுவது போன்றவை. மேலும் பயன்படுத்தும்போது அதன் சிறப்பு அம்சங்களை அறிந்துக்கொள்ள முடியும்.
Vacuum Base - வேகுவம் பேஸ்: இக்கருவியைக் கொண்டு ஓடும் வாகனங்களில் கேமராவை இணைக்கமுடியும். திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள்.. கதாபாத்திரங்கள் கார் போன்ற வாகனங்களில் செல்லும்போது அவர்கள் அருகிலிருந்து படம் பிடிக்கப்பட்டிருப்பார்கள். வாகனங்களுக்கு உள்ளே கேமராவை வைத்து படம் பிடித்து விடலாம்,ஆனால் வெளியே இருந்து படம்பிடிப்பது எப்படி? காருக்கு வெளியே கேமராவை காரோடு பொருத்த இக்கருவி உதவுகிறது.
வேகுவம் பேஸ் என்பது வேறொன்றுமில்லை. வழக்கமான தத்துவம் தான். காற்றை அடிப்படியாக கொண்டு ஒட்டிக்கொள்ளும் தன்மைக் கொண்ட சில பொருள்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். குறிப்பாக சட்டைகளை தொங்க விட ஒரு சிறிய ரப்பரால் ஆன கருவி இருக்குமே..! நாம் கூட அதை கதவுகளில் அல்லது சமதளமான சுவற்றில் ஒட்டுவோமே..! அது எப்படி இயங்குகிறது? அந்த ரப்பரால் ஆன பகுதியிலிருக்கும் காற்றை வெளியேற்றி அதை சுவரோடு ஒட்டும்போது சுவற்றுக்கும் ரப்பருக்கும் இடையே காற்றில்லா வெற்றிடம் உருவாகி வெளியே இருக்கும் காற்றழுத்தத்தால் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்கிறது அல்லவா..!? அதேதான் இங்கேயும்.
வேகுவம் பேஸ் கருவியில் கேமராவை இணைக்க தேவையான பகுதி உள்ளது. மேலும் இக்கருவியை காரோடு இணைக்க ரப்பரால் ஆன அமைப்புகள் இருக்கிறது. இந்த ரப்பர்கள் காரின் சீரான வெளிப்புறங்களில் ஒட்டவைக்க ஏதுவாகிறது. இந்த ‘காற்றுத் தத்துவத்தில்’ இயங்குவதனால் தான் இதை 'வேகுவம் பேஸ்' என்கிறோம்.
கார் மட்டுமல்ல எந்த வாகனத்திலும் இக்கருவியை பொறுத்த முடியும். இக்கருவியை வாகனங்களின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் பொறுத்தமுடியும். அதில் கேமராவைப் பொறுத்தி, நமக்கு தேவையான ஷாட்ஸை எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
SteadiCam - ஸ்டெடி கேம்: இக்கருவியின் மூலம் கேமராவை அதன் இயக்குபவரின் உடலோடு இணைத்து விட முடியும். அதனால் நடக்கும்/ஓடும் கதாபாத்திரத்தை இக்கேமரா பொறுத்தப்பட்ட நபரும் நடந்து அல்லது ஓடி படம் பிடிக்க முடியும்.
கேமராவை உடலோடு இணைத்துக்கொண்டு நடக்கும்போது ஆடும்(shake) அல்லவா? அதை தவிர்ப்பதற்குதான் இந்த 'SteadiCam' பயன்படுகிறது. இதில் Stabilizing கருவிகள் இணைக்கப்பட்டுள்ளது. அதாவது வாகணங்களில் இருப்பதைப்போன்ற அதிர்வை தாங்கும் கருவிகளைக் கொண்டது.
இந்த கருவி மூன்று பகுதியாக கொண்டது. ஒன்று ஒளிப்பதிவாளர் அல்லது கேமரா இயக்குபவர்(இதை இயக்க தனியாக SteadiCam Operater உண்டு) இன் உடலோடு இணைக்கப்படும் பகுதி. இரண்டு கேமரா,பேட்டரி மற்றும் 'மானிட்டர்' போன்ற கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும் பகுதி. மூன்றாவது இந்த இரண்டு பகுதிகளையும் இணைக்கும் 'Arm' பகுதி. இந்த 'Arm' பகுதியில்தான் அதிர்வை தாங்கும் கருவிகள் இருக்கும்.
சரி..இயக்கத்திலிருக்கும் 'Subject'-ஐ படம்பிடிக்கத்தான் 'டிராலி' இருக்கிறதே.. அப்போது இது எதற்கு?
டிராலி போன்றவை சமதளத்தில் நகரும் 'Subject'-ஐ அல்லது அதை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு இருக்கும் இடங்களில் படம்பிடிக்க முடியும். ஆனால் சமதளமாக இல்லாமல், அதை ஏற்படுத்தவும் முடியாத சூழ்நிலைகளில்?
விளையாட்டு திடல், சாலை மற்றும் தொடர்ந்து நடந்துக்கொண்டே இருக்கும் கதாபாத்திரம் போன்ற சூழ்நிலைகளில் இந்த 'SteadiCam' மிகவும் பயன்படும்.
கேமரா லென்ஸில் 'Focus Motor' பொருத்தப்பட்டிருக்கும், இதை இயக்க தனியாக(wire or cardless) ஒரு கருவி இருக்கிறது. இதை 'ஃபோக்கஸ் புல்லர்' பயன்படுத்தி இயக்குவார். அதேபோல் கேமராவில் பதிவாகும் பிம்பத்தைப் பார்க்க ஒரு சிறிய மானிட்டர் wire or cardless மூலம் இணைக்கப்படும். இதை இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் பயன்படுத்துவார்கள்.
இந்த 'SteadiCam'-ஐ இணைத்துக்கொண்ட நபர் வாகணங்களில் அமர்ந்து கதாபாத்திரத்தை தொடரலாம், அவரோடு ஓடலாம், நடக்கலாம். இப்போதெல்லாம் தனியாக இரண்டு சக்கரங்கள் கொண்ட மோட்டார் பொருத்தப்பட்ட சிறிய வண்டியை 'SteadiCam' ஆப்பிரேட்டர்கள் பயன்படுத்துகிறார்கள். இது இன்னும் இங்கே வரவில்லை. மும்பையில் வந்துவிட்டது.
Crane - கிரேன்: பொதுவாக நடைமுறையில் 'கிரேன்' என்றால் என்ன? உயரம் தூக்கி அல்லது பளு தூக்கி இல்லையா? அதேதான் இங்கேயும்..!.
அதேபோன்ற கருவிதான், ஆனால் சில வித்தியாசங்கள் உண்டு. நீண்ட உயரமான 'Arm' என அழைக்கப்படும் பகுதியானது செங்குத்தான ஒரு தூணில் இணைக்கப்பட்டிருக்கும். அதாவது இருப்பக்கங்களாக பிரித்து, ஒருபக்கத்தை கிழே அழுத்தினால் மறுபக்கம் மேலெழும்படியான அமைப்பு அது. நாம் விளையாட்டு திடல்களில் பார்த்திருப்போமே.. 'See-Saw' தத்துவத்தில் அமைந்தது. ஆனால் இரண்டுபக்கமும் சரிச்சமமாக பிரிக்கப்பட்டிருக்காது. ஒருபக்கம் நீண்டும், அடுத்தப்பக்கம் நீளம் குறைவாகவும் இருக்கும். நீண்டப்பகுதியின் முணையில் கேமரா,ஒளிப்பதிவாளர் மற்றும் கேமரா இயக்குபவர்/'ஃபோக்கஸ் புல்லர்' ஆகியோர் அமர்வதற்கான அமைப்பும், மறுபக்கம் அடுத்தப் பக்கத்தின் பளுவை சமன்செய்ய தேவையான 'பாரம்'(weigth) இணைப்பதற்கான அமைப்பும் இருக்கும். இந்த 'weight' என்பது இரும்பு கட்டிகளாகும். அதாவது ஒருபக்கத்தில் இருக்கும் 'கேமரா,ஒளிப்பதிவாளர் மற்றும் கேமரா இயக்குபவர்' ஆகியோரின் எடையை மறுபக்கத்தில் இரும்பு கட்டிகள் இணைப்பதன் மூலம் சமன் செய்யப்படுகிறது. அதனால் இரண்டுபக்க எடையும் நிகராகி 'Arm' என்று அழைக்கப்படும் அந்த நீண்ட பகுதி சமக்கோட்டில் இருக்கிறது.
இதனால் இப்போது ஒருபக்கத்தில் சிறு அழுத்தம்கொடுத்தாலும் அடுத்தப்பகுதி மேலெழும்பும். இப்படித்தான் ஒருபக்கத்தை அழுத்துவதன் மூலம் கேமரா இருக்கும் பக்கத்தை மேலெழுப்புகிறார்கள். மேலும் தூணோடு இணைக்கப்பட்ட பகுதி திரும்புவதற்கும் வசதியுடையது,அதனால் தேவைக்கேற்ப கேமராவை மேலே எழுப்பவும் கிழே இறக்கவும் முடிவதோடு, எந்தப்பக்கம் வேண்டுமானாலும் வலது இடது அல்லது முழுதாக '360டிகிரி'திருப்ப முடிகிறது. அதேப்போல் அந்த தூண் ஒரு அடிப்பகுதியில் இணைக்கப்பட்டு அந்த அடிப்பகுதியில் நகர்த்துவதிற்கான சக்கரங்களும் இணைக்கப்பட்டிருக்கும். இதனால் 'கிரேனை' நமக்கு தேவையானபடி தேவையான இடத்திற்கு நகர்த்திக்கொள்ள முடிகிறது.
கிரேனின் இருக்கிறேன் |
இப்படியான ஒரு அமைப்பைக்கொண்டு என்ன வகையான ஷாட்ஸ்(SHOTS)எடுப்பார்கள் என்று நான் சொல்லத்தான் வேண்டுமா? உங்களுக்கே தெரியும்தானே?!
Trally - டிராலி: பொதுப்பெயராக பார்த்தால் பொருள்களை ஒரு இடத்திலிருந்து இன்னொறு இடத்திற்கு நகர்த்துவதற்கு பயன்படும் சாதனத்தைக் குறிப்பது. தொழில்சாலையில் அட்டைபெட்டிகளையோ பொருட்களையோ இடமாற்றுவதற்கு பயன்படுத்தப்படுவதும், மருத்தவமனைகளில் நோயாளிகளை இடமாற்றுவதற்கு பயன்படுவதும் இந்த டிராலிகள்தான்.
இங்கேயும் அதேதான். கேமராவை இடமாற்றுவதற்கு. அதுவும் கேமரா இயங்கிக் கொண்டிருக்கும் போதே சீராக இடம் மாற்றி, நகரும் 'subject'-ஐ படம்பிடிப்பதற்கு பயன்படுகிறது.
டிராலியில் இருக்கிறேன் |
இரயிலைப்போல, டிராலிக்கு தண்டவாளம் எதற்கு என்றால், அப்போதுதான் கேமராவை நகர்த்தும் போது சீராக, ஆட்டம் இல்லாமல் இருக்கும். கேமரா ஆட்டமில்லாமல்(Shake) படம்பிடிப்பது அவசியம் இல்லையா? அதனால் தான் இப்படி ஒரு அமைப்பு பயன்படுத்தப்படுகிறது.
ஐந்து அடிகளை கொண்ட தண்டவாளங்களாக பல பகுதிகள் தனித்தனியாக இருக்கும். இதை தேவைக்கு ஏற்ப ஒன்றிணைத்து நீளமாக்க முடியும். அதேபோல் வட்டவடிவ தண்டவாளங்களும் உண்டு. இதன்மூலம் 'Subject' சுற்றி 'Round Trally' ஷாட்ஸ் எடுக்கமுடிகிறது.
இந்த டிராலியில் சிறிய கிரேனை(12ft) இணைத்தும் பயன்படுத்தமுடியும். இப்போது டிராலி, கிரேனுக்கான நடுதூணாக செயல்படும்.
டிராலியில் கிரேன் |
jimi-jib - ஜிம்மி ஜிப்: இது கிரேனின் நவினவடிவம். அதேபோல அமைப்புக் கொண்டது. ஆனால் இதில் ஆட்கள் யாரும் அமரவேண்டியது இல்லை. கேமராவை இயக்க தானியங்கி கருவிகள் உண்டு. அக்கருவிகளை, கிழே இருந்துக்கொண்டே நாம் கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பட்டு அமைப்பு இருக்கிறது.
இந்த 'ஜிம்மி ஜிப்'-ஐ நீங்கள் தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கமுடியும். ஏதேனும் நடன நிகழ்ச்சியோ,பாட்டு நிகழ்ச்சியோ அல்லது விருது வழங்கும் நிகழ்ச்சியின்போதோ நீங்கள் பார்த்திருக்கமுடியும். ஒரு நீண்ட 'Arm'-இல் கேமரா இணைக்கப்பட்டு பார்வையாளர்களின் தலைக்குமேல் செல்லுமே..! அப்போது பார்வையாளர்கள் அதை நோக்கி கைகளை ஆட்டி ஆர்ப்பரிப்பார்களே..! அதுதான் 'ஜிம்மி ஜிப்'.
இக்கருவி 'கிரேனுக்கு' மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. இதில் ஒளிப்பதிவாளர் மற்றும் கேமரா இயக்குபவர்/'ஃபோக்கஸ் புல்லர்' போன்றவர்கள் அமர வேண்டியது இல்லை என்பதனால் பாரம் குறைவாக இருக்கும். மேலும் இக்கருவியை எங்கே வேண்டுமானாலும் சுலபமாக பயன்படுத்த முடியும். தனித்தனியாக பாகங்களாக பிரித்து எடுத்துச்செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
ஹைட்ராலிக் கிரேன் |
தானியங்கி அமைப்பில் கேமரா பொருத்தப்பட்டிருப்பதால், மிக சீராக இயக்க முடியும். மேலும் கிரேனால் எடுக்க முடியாத சில ஷாட்டுகளை இதில் எடுக்க முடியும். (உ.தா) தலைக்குமேல் சுற்றுவது, மேலிருந்து கிழே இறங்கி 'subject'-ஐ சுற்றுவது போன்றவை. மேலும் பயன்படுத்தும்போது அதன் சிறப்பு அம்சங்களை அறிந்துக்கொள்ள முடியும்.
Vacuum Base - வேகுவம் பேஸ்: இக்கருவியைக் கொண்டு ஓடும் வாகனங்களில் கேமராவை இணைக்கமுடியும். திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள்.. கதாபாத்திரங்கள் கார் போன்ற வாகனங்களில் செல்லும்போது அவர்கள் அருகிலிருந்து படம் பிடிக்கப்பட்டிருப்பார்கள். வாகனங்களுக்கு உள்ளே கேமராவை வைத்து படம் பிடித்து விடலாம்,ஆனால் வெளியே இருந்து படம்பிடிப்பது எப்படி? காருக்கு வெளியே கேமராவை காரோடு பொருத்த இக்கருவி உதவுகிறது.
வேகுவம் பேஸ் என்பது வேறொன்றுமில்லை. வழக்கமான தத்துவம் தான். காற்றை அடிப்படியாக கொண்டு ஒட்டிக்கொள்ளும் தன்மைக் கொண்ட சில பொருள்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். குறிப்பாக சட்டைகளை தொங்க விட ஒரு சிறிய ரப்பரால் ஆன கருவி இருக்குமே..! நாம் கூட அதை கதவுகளில் அல்லது சமதளமான சுவற்றில் ஒட்டுவோமே..! அது எப்படி இயங்குகிறது? அந்த ரப்பரால் ஆன பகுதியிலிருக்கும் காற்றை வெளியேற்றி அதை சுவரோடு ஒட்டும்போது சுவற்றுக்கும் ரப்பருக்கும் இடையே காற்றில்லா வெற்றிடம் உருவாகி வெளியே இருக்கும் காற்றழுத்தத்தால் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்கிறது அல்லவா..!? அதேதான் இங்கேயும்.
வேகுவம் பேஸ் கருவியில் கேமராவை இணைக்க தேவையான பகுதி உள்ளது. மேலும் இக்கருவியை காரோடு இணைக்க ரப்பரால் ஆன அமைப்புகள் இருக்கிறது. இந்த ரப்பர்கள் காரின் சீரான வெளிப்புறங்களில் ஒட்டவைக்க ஏதுவாகிறது. இந்த ‘காற்றுத் தத்துவத்தில்’ இயங்குவதனால் தான் இதை 'வேகுவம் பேஸ்' என்கிறோம்.
கார் மட்டுமல்ல எந்த வாகனத்திலும் இக்கருவியை பொறுத்த முடியும். இக்கருவியை வாகனங்களின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் பொறுத்தமுடியும். அதில் கேமராவைப் பொறுத்தி, நமக்கு தேவையான ஷாட்ஸை எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
SteadiCam - ஸ்டெடி கேம்: இக்கருவியின் மூலம் கேமராவை அதன் இயக்குபவரின் உடலோடு இணைத்து விட முடியும். அதனால் நடக்கும்/ஓடும் கதாபாத்திரத்தை இக்கேமரா பொறுத்தப்பட்ட நபரும் நடந்து அல்லது ஓடி படம் பிடிக்க முடியும்.
கேமராவை உடலோடு இணைத்துக்கொண்டு நடக்கும்போது ஆடும்(shake) அல்லவா? அதை தவிர்ப்பதற்குதான் இந்த 'SteadiCam' பயன்படுகிறது. இதில் Stabilizing கருவிகள் இணைக்கப்பட்டுள்ளது. அதாவது வாகணங்களில் இருப்பதைப்போன்ற அதிர்வை தாங்கும் கருவிகளைக் கொண்டது.
இந்த கருவி மூன்று பகுதியாக கொண்டது. ஒன்று ஒளிப்பதிவாளர் அல்லது கேமரா இயக்குபவர்(இதை இயக்க தனியாக SteadiCam Operater உண்டு) இன் உடலோடு இணைக்கப்படும் பகுதி. இரண்டு கேமரா,பேட்டரி மற்றும் 'மானிட்டர்' போன்ற கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும் பகுதி. மூன்றாவது இந்த இரண்டு பகுதிகளையும் இணைக்கும் 'Arm' பகுதி. இந்த 'Arm' பகுதியில்தான் அதிர்வை தாங்கும் கருவிகள் இருக்கும்.
SteadiCam Operater-உடன் நான்,கையில் மினி மானிட்டர் |