Tuesday, 19 March 2013

Inception - ஒரு பார்வை


'Inception' படம் நேற்றுதான் பார்த்தேன். வழக்கம் போலதான் 'நோலன்' தான் ஒரு தனித்துவமான படைப்பாளி என்பதை நிருபித்திருக்கிறார். படத்தைப்பற்றி ஜாக்கியிலிருந்து ஜெய்வரைக்கும் பலர் பேசி விட்டனர். புரிந்தவர்கள் சந்தோசப்பட்டுக்கொள்ளுங்கள், புரியாதவர்கள் ஆர்வம் இருந்தால் புரிந்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். நானும் முயல்கிறேன்.


'Inception' பற்றி பதிவு போடாமல் இருந்தால் அது தானத்தலைவன் 'நோலன்' அவர்களுக்கு செய்யும் அவமரியாதை, ஆனால் கதையைப்பற்றி பேசி உங்களையும் குழப்ப நான் விரும்பவில்லை. அதனால் அந்தப்படத்தின் சில தொழில்நுட்பங்களையும், உருவாக்கத்தைப்பற்றியும் சில தகவல்கள் இங்கே.






இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் 'Wally Pfister'. இவர்தான் நோலனின் மற்ற படங்களான Memento, Insomnia, Batman Begins, The Prestige, The Dark Knight படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்தவர்.





உபயோகித்த கேமராக்கள்:


35mm: Panaflex Millennium XL, PFX System 65 Studio, PanArri 435ESA, 235


65mm: 35mm-ஐப் போல 65mm படச்சுருளைப் பயன்படுத்தும் கேமரா, முன்பெல்லாம் இதைக்கொண்டுதான் 70mm படங்கள் உறுவாக்கப்பட்டன.


Imax: இன்று உலகில் இருக்கும் பெரிய பரப்பளவுக்கொண்ட ஃபிலிம் கேமரா. 35mm  '4 Perforation'-இல் பிம்பம் பதிவுசெய்யப்பட்டால் இதில் '15 Perforation' பிம்பம் பதிவுச்செய்யப்படுகிறது. இந்தப்படத்தின் சில சண்டைக்காட்சிகள் Imax-இல் எடுத்திருக்கிறார்கள்.


Vista Vision 8-perf 35mm - for aerial shots: இது 35mm ஃபிலிமைப் பயன்படுத்தும் கேமராதான். ஆனால் மற்ற கேமராக்களைப்போல ஃபிலிமில் 'Vertical-ஆக பிம்பத்தைப் பதிவுசெய்யாமல், 'horizontal'-ஆக பதிவுசெய்கிறது. இந்த கேமரா 'Paramount Pictures'-ஆல் 1954ல் உறுவாக்கப்பட்டது. துள்ளியமான படங்களுக்காக(finer-grained projection print) பயன்படுத்தப்பட்டது. பின்பு அதி நவின 'finer-grained films' வந்தப்பிறகு இது தேவையற்றதாகிவிட்டது.




அதிவேக ஷாட்டுகளுக்காக:
Photo-Sconics 4ER-360fps: இந்த கேமராக்களைப்பற்றி தனிப்பதிவுகளேப் போடலாம். இப்போதைக்கு அதன் இணைய தளங்களுக்குச் செல்லுங்கள்.
4E Rotary Prism-1500fps  
Vision Research Phantom HD




லென்ஸுகள்:
Panavision Primo, Super High Speed, C-Series, E-Series, G-Series, System 65mm lenses.


உபயோகித்த படச்சுருள்கள்:
Kadok vision3-500T(5219), 250D(5207)
Printed on Kodak Vision 2383


ஒளிப்பதிவாளர் 'Wally Pfister' தான் உபயோகித்த படச்சுருள்களைப்பற்றி குறிப்பிடும்போது, தனக்கு 5219 மற்றும் 5207 போதுமானதாக இருப்பதாக சொல்லுகிறார். பகலில் 5207 பயன்படுத்தும்போது அதிக ஒளி இருந்தால் ND ஃபில்டர்களை உபயோகித்துக்கொள்வதாகச் சொல்லுகிறார். வண்ண வேறுபாட்டைக் காட்ட தான் படச்சுருளை மாற்றுவதில்லை என்றும் அதற்கு பதிலாக ஒளியமைப்பில் அதைக் கொண்டுவருவதாகவும் சொல்லுகிறார். இரவு காட்சிகளுக்கு 5219-ஐ பயன்படுத்துவதாக சொல்லுகிறார்.


இந்தப்படத்தில் செட்டுப் போட்டு எடுத்த பெரும்பாலும் காட்சிகள் இங்கிலாந்தில் 'Cardington' உள்ள ஒரு முன்னால் விமானக்கட்டுமானப் தளத்தில் எடுத்துள்ளார்கள். 'நோலனின்' முந்திய இரண்டு படங்களும்(Batman Begines, Dark Knight) இங்கேதான் செட் போடப்பட்டிருக்கிறது.


ஜப்பானின் 92 நாட்கள் படபிடிப்பு நடத்தி இருக்கிறார்கள். 'los angeles'-இல் மூன்று வாரம் அந்த முதல்தள கனவில் வரும் மழை சண்டையை எடுத்திருக்கிறார்கள். மொரோக்கோ, பாரிஸ், லண்டன், அமெரிக்கா, ஜப்பான் என்று ஆறு நாடுகளில் படம் பிடித்திருக்கிறார்கள்.




ஒரு ஹோட்டல் Bar செட்டை 30 degrees சாய்த்துப் போட்டிருக்கிறார்கள். அந்த லிஃப்டை படுக்கை வாட்டில் செட் போட்டிருக்கிறார்கள். புவி ஈர்ப்புவிசையற்ற ஹோட்டல் வராண்டாவில்(Hotel hallway) நடக்கும் அந்த சண்டை காட்சிக்காக, இரண்டு விதமான செட் போட்டிருக்கிறார்கள். ஒன்று மொத்த 'Hotel hallway'-வும் 'Vertically' 360 டிகிரி சுற்றும் படியாகவும். மற்றொன்று ''Vertically' நிறுத்தப்பட்டு அதில் நடிகர்கள் கம்பிகள் கொண்டு தொங்கவிடப்பட்டு படமாக்கப்பட்டுள்ளார்கள். பின்பு 'Post'-இல் கம்பிகளை எடுத்துவிடுவது. இந்த காட்சிகளுக்கு 'technocrane' பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 






இதைப்பற்றி 'நோலன்' என்ன சொல்கிறார் என்றால், குறிப்பாக இந்த மாதிரியான காட்சிகள் 'CG'-இல் உறுவாக்கப்படும். ஆனால் நாங்கள் எதையும் முடிந்தயளவிற்கு கேமராவிலேயே கொண்டு வர முயன்றோம். அது சிறப்பாகவும் வந்திருக்கிறது என்கிறார். Special Effects Supervisor Chris Corbould இல்லாமல் இந்த காட்சிகளை எங்களால் எடுத்திருக்கமுடியாது என்று கூறுகிறார்.






அதேபோல் கிளைமாக்ஸில் வரும் அந்த பனிமலை சண்டைக்காட்சியை எடுக்க சிறப்பு ஒளிப்பதிவாளர் 'Chris Patterson'-ஐ நடிகர்களோடு பனியில் கையில் கேமராவோடு சறுக்கி சென்று படம் பிடிக்க செய்திருக்கிறார்கள். அதேபோல் அந்த ஷாட்டுகளை ஃபோக்கஸ் செய்ய 'focus puller'-வும் ஒளிப்பதிவாளரின் பின்னால் பனியில் சறுக்கிக்கொண்டு சென்றிருக்கிறார். கனடாவில் எடுக்கப்பட்ட அந்த காட்சிக்காக 669 பனிமலை ஏறுபவர்களை பயன்படுத்திருக்கிறார்கள்.








இந்த காட்சியில் உபயோகித்த கருவிகள்:  
Beaucam VistaVision camera for helicopter shots.
PanArri 235 for action sports. 200'2c magazines. lens 28mm,35mm or 75mm panavision G-Series Anamorphic Prime. 
Primo 48-550mm and 270-840mm zoom lenses were used to capture some shots from a distance.
Camera supported with lightweight rig - Red Rock Micro that includes a (Preston wireless) FIZ remote follow focus.
Scorpio gyrostabilized head-used to capture some high-speed work and tracking shots in deep snow.




கடைசியா 'நோலன்' சொல்லுவது என்னவென்றால் "fundamentally, i wanted every shot to be moving"


இப்படி இந்தப் படத்தின் உறுவாக்கத்தைப்பற்றி நிறைய பேசிக்கொண்டேச் செல்லலாம். இப்போதைக்கு இங்கே முடித்துக்கொள்வோம். வேண்டுமானால் நம்மால் முடிந்தது ஒன்று வேண்டுமானால் சொல்லலாம்.


"Christopher Nolan-னும் Wally Pfister-ம் வாழ்க..வாழ்க"