5Cs-கேமராக் கோணங்களின் வகைகள்:TYPES OF CAMERA ANGLES_Part_6
கேமராக்கோணத்தை மூன்று முக்கிய காரணிகள் தீர்மானிக்கின்றன. அவை
SUBJECT SIZE - படமாக்கும் பொருளின் அளவு
SUBJECT ANGLE - படமாக்கும் பொருளின் கோணம்
CAMERA HEIGHT - கேமரா உயரம்.
இதில் 'SUBJECT SIZE' மற்றும் 'SUBJECT ANGLE'-ஐப் பற்றிய கட்டுரைகளுக்கு சொடுக்கவும்.
அதேபோல் 'CAMERA HEIGHT'-ஐப் பற்றிய முந்தியக் கட்டுரையில் 'LEVEL ANGLE' பற்றிப் பார்த்துவிட்டோம், இந்தக்கட்டுரையில் 'HIGH ANGLE' பற்றிப் பார்ப்போம்.
HIGH ANGLE- 'ஹை
ஆங்கிள்' என்பது கேமரா கீழ்நோக்கித் திருப்பப்பட்டு எடுக்கப்படும்
கோணத்தைக் குறிக்கிறது. அதாவது கேமரா மேடான இடத்திலோ அல்லது உயரமான
இடத்திலோ வைத்து படமெடுக்கவேண்டும் என்பதில்லை. கேமரா எந்த உயரத்தில்
வேண்டுமானாலும் வைக்கப்படலாம். கேமராவை 'tilte down' செய்து எடுக்கப்படும்
எந்த ஷாட்டும் 'High Angle' ஷாட் எனப்படும்.
சில சமயம் கேமரா
ஒளிப்பதிவாளனின் 'eye-level' விட குறைந்த உயரத்தில் வைக்கப்பட்டு சிறிய
பொருளைப் படம் பிடிக்க கீழ்நோக்கி திருப்பப்பட்டு படம் பிடிக்கப்படும்,
இதுவும் 'High Angle' ஷாட் எனவே அழைக்கப்படும்.
படம்
பிடிக்கப்படும் பொருளின் உயரத்தோடு சம்பந்தப்படுத்திதான் கேமராவின் கோணம்
என்பதைப் பொருள் கொள்ளவேண்டும். ஒரு உயரமான கட்டிடத்தின் சன்னல் வழியாக
வெளிப்புறத்தைப் பார்க்க கேமரா சராசரி 'eye-level' அமைக்கப்பட்டிருக்கலாம்,
கீழ்நோக்கி சிறிதளவாக திருப்பட்டிருந்தாலும் அந்த ஷாட்டை 'High Angle'
ஷாட் என்றே கொள்ளவேண்டும். கேமரா சிறிதளவாகவோ அல்லது முழுமையாகவோ
கீழ்நோக்கி திருப்பப்பட்டு (tilted downward) படமாக்கப்படும் எந்த ஷாட்டும்
'High Angle' ஷாட் என்றே அழைக்கப்படுகிறது.
ஒரு
'High Angle' ஷாட் தொழில்நுட்பரீதியாகவோ, மனோத்தத்துவரீதியாகவோ அல்லது
கதையின் போக்கிலோ அமைக்கப்பட்டிருக்கலாம். ஒரு நிகழ்வை மேலிருந்து
பார்க்கும் போது, பார்வையாளன் நிகழம் செயலை முழுமையாகப் பார்க்கமுடிகிறது.
அதனால் பார்வையாளனின் முழு ஈடுபாட்டையும் பெறமுடிகிறது. மேலும்
தொழில்நுட்பரீதியில் அந்த செயல் நடைபெறும் முழு பரப்பளவையும் 'in depth in
sharp focus'-இல் வைக்கமுடிகிறது.
ஒரு
இராணுவ அணிவகுப்பு, நீண்டு விரியும் இரயில்பாதை, அடர்ந்த காடு, மலை
முகடுகள், தொழிட்சாலை வளாகம், விமானத்தளம், கோல்ஃப் மைதானம் அல்லது
கட்டுமானப்பணிகள் நிகழும் தளம் என பரந்துவிரிந்த நிலப்பரப்புகளைக் காட்ட
'High Angle' ஷாட் நன்குப் பயன்படும். உயரத்திலிருந்துப்
பார்க்கவைக்கப்படும் போது பார்வையாளனுக்கு அந்த இடத்தின் புவியியல் சார்ந்த
புரிதல் ஏற்படுகிறது. கீழ்நோக்கிய பார்வை ஒரு வரைப்படத்தைப்
பார்ப்பதைப்போன்ற உணர்வைக்கொடுக்கிறது.
நீண்ட
பரப்பளவில் நிகழும் நிகழ்வுகளைக் காட்ட 'High Angle' ஷாட் பயன்படும்.
உதாரணமாக கால்பந்தாட்ட விளையாட்டு, பறவைகளின் இடமாற்றம் அல்லது இராணுவ
அணிவகுப்பு. இவற்றை 'level or low angle' ஷாட்டாக எடுத்தால் முன்னால்
நிகழும் செயல்கள்(foreground action) மட்டும்தான் பார்க்கமுடியும். அதுவே
மேலிருந்துப் படமாக்கும்போது அந்த நிகழ்வின் முழு பரிமாணத்தையும்
பார்க்கமுடியும். முற்பகுதியிலிருந்து கடைசிவரை ஒரே ஷாட்டிற்குள்
கொண்டுவர 'High Angle' ஷாட்டால் மட்டுமே முடியும்.
கேமராவின் உயரத்தை உயர்த்தி கீழ்நோக்கி திருப்பப்பட்டு படமாக்கும் போது லென்ஸின் 'depth of
field'-ஐக்
குறைத்து முழுப்பரப்பளவையும் 'focus'-இல் வைக்கமுடியும். சமதளத்திலிருந்து
எடுக்கப்படும் 'level angle shot'-ஐ விட உயரத்திலிருந்து எடுக்கப்படும்
'High Angle' ஷாட்டில் மொத்தப் பரப்பளவும் அதிக 'focus'-இல் இருக்கும்.
அதாவது முற்புறக் காட்சிக்கும் பின் புறக்காட்சிக்கும் அதிக 'focus'
வித்தியாசம் இருக்காது.
'High
Angle' ஷாட், ஒரு நடிகனின் அல்லது பொருளின் உயரத்தைக் குறைத்துக்காட்டும்.
ஒரு உயரமான நடிகன் குள்ளமான நடிகனை குனிந்துப்பார்க்கும் படியான
'Subjective' கேமரா ஷாட் பார்வையாளனை உயரத்தில் வைக்கிறது, அதனால் குனிந்து
குள்ளமான நடிகனைப் பார்க்கும் போது அவனைவிட தான் உயர்ந்தவன், மேண்மையானவன்
என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அதாவது கதாப்பாத்திரத்தின் ஆளுமையை
பொருத்து 'High Angle' ஷாட்டைப் பயன்படுத்தலாம். ஒரு தோல்வியடைந்த மனிதனை
அல்லது சூழ்நிலையாலையோ, இயற்கையினாலையோ தாழ்ந்தவன் என்றவிதத்தில் ஒரு
கதாப்பாத்திரத்தை காட்ட கேமராவை உயரமான இடத்தில் வைத்தும், 'wide-angle
lens'-ஐப் பயன்படுத்தியும் அவன் உருவத்தை சிறிது படுத்துவதின் மூலம்
சிறப்பாகக் வெளிப்படுத்த முடியும்.
விரைவாக
நிகழும் செயல்களைக் காட்ட 'High Angle' ஷாட் பயன்படும். உதாரணமாக குதிரைப்
பந்தயம், கார் பந்தயம் அல்லது ஓட்டப் பந்தயம். ஏனெனில் மேலிருந்துப்
பார்ப்பதினால் வேகம் குறைந்ததைப்போன்று தோன்றும், காரணம் ஒரு
புள்ளிலிருந்து அடுத்தப்புள்ளிக்கு செல்லவதைப் முழுமையாகப்
பார்க்கமுடியும். இதையே ஒரு 'level shot'-ஆக எடுத்தால் ஒரு புள்ளியை
நொடியில் வேகமாக விரையும் குதிரை/வீரன் கடந்துச்சென்றுவிடுவான், அதனால்
அந்த காட்சியை நாம் முழுமையாகக் காண அந்த ஷாட்டை 'slow motion'-இல்
எடுக்கவேண்டிவரும். அதைவே 'High Angle' ஷாடாக எடுத்தால் நம்முடைய பார்வைப்
பரப்பு அதிகமாக இருப்பதினால் அந்த காட்சியை முழுமையாகக் காண முடியும்.
'High Angle'
ஷாட் என்பதை கதை நடக்கும் இடத்தை பார்வையாளனுக்கும் அறிமுகப்படுத்தவும்
அதன் முழுப் பரப்பளவைப் புரிந்துக்கொள்ளவும் அழகியல் சார்ந்த
வெளிப்பாடாகவும் மேலும் திரை நடிகனோடு பார்வையாளனின் ஈடுபாட்டை
ஏற்படுத்தவும் பயன்படுத்தலாம்.
'Low Angle' ஷாட்சைப் பற்றி அடுத்தக்கட்டுரையில் பார்ப்போம்.
முந்தையக் கட்டுரையில் கேட்கப்பட்டக் கேள்விக்கான பதில்கள்:
1. CAMERA HEIGHT - கேமரா உயரம் என்பதை நீங்கள் எப்படி புரிந்துக்கொள்கிறீர்கள்?
கேமரா உயரம்
என்பது, கேமரா எந்த உயரத்தில் வைக்கப்பட்டு படமாக்கப்படுகிறது என்பதைக்
குறிக்கிறது. கேமராவின் உயரம் என்பது படமாக்கப்படும் பொருளின் உயரத்தோடு
சம்பந்தப்பட்டது. சம்பந்தப்பட்ட காட்சி அல்லது பொருளைச் சார்ந்து கேமராக்
கோணம் அமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் அந்த காட்சியின் முழுமையான புரிதல்
ஏற்படும். அதனால் கேமராக்கோணம் என்பதும் அதைச்சார்ந்து மாறுபடும். அதாவது
உயரம் மாற கோணம் மாறுகிறது. எனவே கேமராக்கோணம் அமைத்தலில் கேமராவின்
உயரமும் முக்கியம் என்பதைப் புரிந்துக்கொள்கிறேன்.
இந்தக் கட்டுரைக்கான கேள்விகள்:
1. எப்போதெல்லாம் 'High Angle' ஷாட் பயன்படுத்தவேண்டும்?
2. 'High Angle' ஷாட்டினால் என்ன பயன்?