Tuesday, 19 March 2013

படச்சுருள் வேலைசெய்யும் முறை:



படச்சுருள் வேலைசெய்யும் முறை:
படச்சுருள் என்பது ஒரு பக்கத்தில் ஒளியைப் பதிய வைக்கக்கூடிய வேதிப்பொருள்கள்(photographic emulsion) பூசப்பட்டிருக்கும் ஒரு நீண்ட பிளாஸ்டிக் பட்டை

யால்(செல்லுலாய்டு, பாலிஸ்டர்) ஆனது.  ஒளியினால் மாற்றம் அடையக்கூடிய (ஒளியை உள்வாங்கிக்கொள்ளும்) 'ஸில்வர் ஹலைட்'(Silver Halide) என்னும் வேதிப்பொருள் ஒரு மெல்லிய பட்டையில் (Gelatin) பூசப்பட்டிருக்கும்.

ஒளிப்பதிவு முடிந்தவுடன், படச்சுருளை 'லேபில்'(Lab) 'புராஸஸ்'(Processe) செய்யும் போது ஒளி பதிந்த பகுதியைத் தவிர்த்து மற்ற பகுதியில் உள்ள 

வேதிப்பொருள்களை நீக்கிவிடுகின்றனர்.

படச் சுருளில் பல அடுக்குகள் (Layers) உண்டு. 


முதல் பாதுகாப்பு அடுக்கு, அதாவது புகைப்படத்தின் மீது போடப்படும் கண்ணாடியைப்போன்றது,கீறல் விழாமல் தடுப்பதற்கு.

அடுத்த அடுக்கு 'நீல வண்ண' ஒளியைப் பதிவுசெய்யும் (Blue Light Sensitive) தன்மை கொண்டது, 'டெவலப்' செய்யும் போது 'நெகட்டிவில்'(Negative) 

'மஞ்சள்'(yellow) நிறமாகிருக்கும்.

அடுத்த அடுக்கு 'மஞ்சள்'(yellow) நிற 'ஃபில்டர்'(Filter) னால் ஆனது. அதனால் இதன் வழியே ஊடுருவிச்செல்லும் ஒளியிலிருக்கும் நீல வண்ணத்தைத் தடுக்க 

முடிகிறது. 'புராஸஸிங்'(Processing) போது நீக்கப்படுகிறது.

அடுத்த அடுக்கு 'நீலம் மற்றும் பச்சை' வண்ணத்தைப் பதிவுசெய்யும் தன்மை கொண்டது (Blue and Green Sensitive). ஆனால் நீல வண்ணம் தடுக்கப்பட்டுவிடுவதால் பச்சை நிறம் மட்டும் பதிவுச்செய்யப்படுகிறது.'நெகட்டிவில்'(Negative) 'மெஜண்டா'(Magenta) வண்ணத்தைக் கொடுக்கும்.

அடுத்தது 'இண்டர் லேயர்'(Interlayer) என்னும் அடுக்கு, அதற்கு அடுத்திருக்கும் அடுக்குகானது 'நீலம் மற்றும் சிவப்பு' வண்ணத்தைப் பதிவுச்செய்யும் தன்மைகொண்டது ( Blue and Red Sensitive). ஆனால் நீல வண்ணம் தடுக்கப்பட்டுவிடுவதால் சிவப்பு வண்ண ஒளி பதிவுசெய்யப்படுகிறது. 'நெகட்டிவில்' 

'ஜியான்'(cyan) வண்ணத்தைக் கொடுக்கும்.

உள்ளேசெல்லும் ஒளியானது படச்சுருளின் அடிப்பாகத்தில் பட்டுப் பிரதிபலித்து மீண்டும் பதிவாக வாய்ப்புள்ளது, அதனால் பதியப்படும் காட்சியானது 

துள்ளியமில்லாமலும்,காட்சியைச்சுற்றித் தேவையற்ற 'ஒளித் தெளிப்பும்'(halation) உண்டாகும். அதைத் தடுக்க 'ஆன்ட்டி ஹலஷன் பேக்கிங்'(Anti halation 


Backing Layer) என்னும் அடுக்கு பயன்படுகிறது.

அதற்கு அடுத்ததாக படச்சுருளின் ஆதார அடுக்கு(Base), ஒளியைப் பிரதிபலிக்காத தன்மைகொண்ட அடுக்கும் உண்டு. புராஸஸில் நீக்கப்படுகிறது.