Tuesday, 19 March 2013

'ALEXA' என்னும் புதிய 'HD' கேமரா:


வருங்காலங்களில் 'Digital' தொழில்நுட்பம் ஆட்சி செலுத்தும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அது திரைப்படம் தயாரிப்பிலும் பிரதிபலிக்கிறது. தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டேபோகிறது. அதன் வேகத்திற்கு ஈடுகொடுத்து நாமும் நம்மை வளர்த்துக்கொள்ளவில்லை என்றால் நாம் பின்தங்கி விடுவோம்.  நம்மை 'update' செய்துக்கொள்வது என்பது இன்றைய சூழலில் மிக ஆதார செயலாகிறது.


புதிய தொழில்நுட்பங்களையும் புதிய கருவிகளையும் அறிமுகப்படுத்தலாம் என்றிருக்கிறேன். அதன் வரிசையில் 'ARRI' நிறுவனத்திலிருந்து புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் 'ALEXA' என்கிற 'HD' தொழில்நுட்பத்தில் இயங்கும் கேமராவைப்பற்றிய கட்டுரை இது.







'ALEXA'  எடை குறைந்த, சிறிய, செலவு குறைந்த 'டிஜிட்டல்' கேமரா, 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தை அடுத்த தளத்திற்கு அழைத்துச்செல்லும், சுலபமான 'Workflows', 35mm தரத்திற்கு இணையானது. திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரப்படங்கள் மற்றும் இசை தொகுப்புகள் என எதையும் குறைந்த செலவில் இந்தக் கேமராவைக்கொண்டு எடுக்கலாம் என்பது 'ARRI' நிறுவனத்தின் அறிமுகம்.


  
இந்த கேமரா 'ARRI' தொழில்நுட்பத்தை மட்டுமல்லாமல் இந்தத்துறையில் இருக்கும் மற்ற பிரபல நிறுவனங்களின் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துகிறது. உதாரணமாக 'Apple' நிறுவனத்தின் 'Apple QuickTime' தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது.


இந்த கேமரா பிம்பங்களை 'SxS memory card'-ல் சேமிக்கிறது. இந்த 'cards'-கான இடம் கேமராவிலேயே இருக்கிறது. (Apple ProRes 4444 or Apple ProRes 422 (HQ) encoded images onto on-board SxS memory cards)


'ALEXA' கேமராவின் தரம் '35mm ஃபிலிமின்' தரத்தோடு ஒத்திருக்கும் என சொல்லுகிறார்கள். காரணம் இந்த கேமரா வழக்கமாக 35mm கேமராக்களில் பயன்படுத்தப்படும் லென்சுகளைப் பயன்படுத்த 'PL Mount'-ஐ கொண்டுள்ளது. அந்த லென்சுகளைப் பயன்படுத்தும் போது ஒரு ஒளிப்பதிவாளன் காட்சியின் 'Focus'-ஐ கட்டுப்படுத்துவதின் மூலம் தனக்கு தேவையான 'Depth of Field'-ஐ உருவாக்கமுடியும், இதனால் பார்வையாளனை திரைப்பட பாணி கதை சொல்லலில் ஒன்றிணைக்க முடிகிறது.


'Digital' பிம்பத்தின் தரத்தை உயர்த்த இந்த கேமரா '35mm' ஃபிலிமின் அளவில் உள்ள 'CMOS' சென்சரை(sensor) உபயோகப்படுத்துகிறது.  இதன் மூலம் 35mm' ஃபிலிமில் கொண்டுவரமுடியும் அதே 'Depth of Field'-ஐ பெறலாம்.


(பிம்பம் பதியப்படும் ஊடகத்தின் அளவைப்(size) பொருத்து பிம்பத்தின் 'Depth of Field' மாறும்.(உ.ம்)  ஒரே 'Focal Lenght' லென்ஸைக்கொண்டு படம் எடுத்தாலும் '35mm' ஃபிலிமிலும் '16mm' ஃபிலிமிலும் 'Depth of Field' மாறும். அது தனி தலைப்பு. அதை வேறு கட்டுரையில் பார்க்கலாம்)




இங்கே நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியது மற்ற 'டிஜிட்டல் கேமராக்கள்' பயன்படுத்தாத இந்த 35mm அளவு 'CMOS' சென்சாரினால் பிம்பமானது 35mm ஃபிலிமின் தரத்திலிருக்கும் என்று அவர்கள் சொல்லுவதைத்தான்.


இந்த கேமரா '800 EI' சென்சிட்டிவ்(sensitive) உடையது, அதாவது '800 ISO' திறன் கொண்ட 'ஃபிலிமை' பயன்படுத்துவதிற்கு சமம்.


 13.5 'Stop' வித்தியாசத்தில் பிம்பத்தை பதிவு செய்யக்கூடிய 'latitude' கொண்டது.


இயல்பான வண்ண மறு உறுவாக்கத்தை தருகிறது, வண்ணங்களிலிருக்கும் வித்தியாசத்தை சிறப்பாக பதிவுச்செய்கிறது இதனால் 'compositing' போது சுலபமாக வேலைசெய்யமுடிகிறது.


குறைந்த வெளிச்சத்திலும் 'Very low noise'-யே கொடுக்கிறது.


குறைந்த எடை, சிறப்பாக கட்டமைக்கப்பட்ட வடிவம் போன்றவை 'ALEXA' கேமராவை 'Handheld shots'-க்கு பயன்படுத்தும்போது எளிதாக இருக்கிறது. அதனுடைய அமைப்புகள் அனைத்தும் சுலபமாக கற்றுக்கொள்ள கூடிய வகையில் இருக்கிறது. நீங்கள் கேமராவில் extra கருவிகள் (உ.ம்: சிறிய விளக்கு, follow focus) பொருத்தினால் அதற்கு தேவையான மின்சாரத்தை பெற கேமராவிலேயே இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.


முக்கியமான அம்சம், நமக்கு தேவையான வண்ண மாறுபாட்டில்(color management) காட்சிகளை சேமிக்கமுடியும். அல்லது இயல்பாக காட்சிகளை சேமித்துக்கொள்ளும் அதே நேரத்தில், வண்ணமாறுபாட்டோடும் காட்சியை சேமிக்கமுடியும். அதாவது இரண்டு வித வண்ணத்தில் காட்சிகளை சேமிக்கமுடியும். இது பின்னால் 'Post Prodution'-னின் போது வண்ண நிர்ணயித்தலில் பயன்படும்.




எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இந்த கேமரா ஓடும் என்கிறார்கள். அது இமயமலையோ, விண்வெளியோடமோ எங்கே வேண்டுமானாலும் இயங்கும். ( RED-ONE போன்ற கேமராக்கள் விரைவில் வெப்பம் அடைந்து நின்று விடுகின்றன, வெப்பம் தனியும் வரை காத்திருக்கவேண்டியதாகிறது)


மற்ற எந்த டிஜிட்டல் கேமராவும் செய்யாத வகையில் இந்த கேமரா 'Post Prodution'-இல் உதவுகிறது. உதாரணமாக 'Apple ProRes 4444 or Apple ProRes 422 (HQ) encoded' பிம்பங்களை பதிவுசெய்வதின் மூலம் நாம் இங்கே பயன்படுத்திக்கொண்டிருக்கும் 'editing' கருவிகளையே பயன்படுத்தலாம். 'Apple’s Final Cut Pro editing software'-ஐ பயன்படுத்தி எடிட்டிங் செய்யலாம். இதனால் புதிய கருவிகள் வாங்க வேண்டிய செலவுகள் தவிர்க்கப்படுகிறது.


'Apple ProRes 4444' கோடக்கை(Codec) பயன்படுத்தி 15 நிமிடமும், 'Apple ProRes 422 (HQ)' கோடக்கை பயன்படுத்தினால் 20 நிமிடமும் 32GB Card-ல் பதிவுசெய்ய முடியும். இந்த Card-ஐ அப்படியே நேரடியாக 'Apple’s MacBook Pro' போன்ற மடிகணினியில் பயன்படுத்த முடியும். உலகமுழுவதும் பயன்பாட்டிலிருக்கும் 'HD' பிம்பங்களை பதிவுசெய்வதினால் 'Direct to Edit' (DTE) தொழில்நுட்பத்தில் நம்மால் நேரடியாக எடிட் செய்ய முடிகிறது. அதாவது படபிடிப்பு தளத்திலேயே நம்முடைய காட்சிகளை பார்க்கவும், எடிட் செய்யவும் முடியும். இதனால் உங்களின் தவறுகளை உடனுக்குடன் சரி செய்துக்கொள்ள முடியும்.


'Uncompressed HD or ARRIRAW' கோடக்கை பயன்படுத்தி பிம்பத்தை பதிவுச்செய்தால் 'off-line/on-line workflow' முறையில் வேலைச்செய்ய வேண்டும்.  'full resolution' பிம்பங்களை 'Editing System'-தில் ஏற்றி வேலைச்செய்ய அதிக திறன் வாய்ந்த கணினி தேவைப்படும், நேரமும் அதிகரிக்கும் அதனால் செலவும் கூடும் என்பதினால் அதை தவிர்க்க off-line/on-line workflow-வை கொண்டுவந்தார்கள். அதாவது 'low resolution' பிம்பங்களை கொண்டு எடிட் செய்வது பின்பு அந்த பிம்பங்களிலின் பதியப்பட்டிருக்கும் தகவல்களைக்(datas: Timecode ) கொண்டு நாம் பயன்படுத்திய காட்சிகளை மட்டும் 'full resolution' பிம்பங்களாக எடுத்துக்கொள்வது. இதனால் தேவையற்ற நேர விரையம், கணினியில் அதிக சேமிப்பு இடம் தேவைப்படுதல் போன்றவை தவர்க்க முடியும்.



இந்த கேமரா அதற்கான 'off-line/on-line பிம்பங்களை தனித்தனியாக கேமராவிலேயே பதிவுச்செய்து தந்துவிடுகிறது. இதனால் எடிட்டிங்கின் போது இரண்டுவிதமாக பிம்பங்களை பிரிக்க வேண்டிய தேவையில்லாமல் போகிறது. நேரமும் செலவும் சேமிக்கப்படுகிறது.


(off-line என்பது குறைந்த resolution கொண்ட பிம்பங்கள், அதாவது நாம் படம்பிடித்த 'high resolution' பிம்பங்களை 'compress' செய்துக்கொள்வார்கள், இதனால் கணினியில் இடம் அதிகம் தேவைப்படாது மற்றும் குறைந்த RAM போன்றவை இருந்தாலும் இலகுவாக வேலைச் செய்ய முடியும்.

எடிட் செய்து முடித்த பிறகு, 'Time-code' or EDL -ஐ கொண்டு நாம் பயன்படுத்திய காட்சிகளை மட்டும் 'High Resolution'-ல் ஏற்றிக்கொள்ள முடியும். இந்த முறையை 'Online' என்கிறார்கள்.)




இந்த கேமரா 16:9 'ஆஸ்பெக்ட் ரேசியோவில்'(Aspect Ratio) '2880 x 1620 pixal' என்ற கணக்கில் பிம்பத்தை சேமிக்கிறது. அதாவது 2K Resolution. இது ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியிட போதுமான தரம்.


கேமராவின் வேகம் நொடிக்கு குறைந்தது 0.75 frame-ஆகவும், அதிக பட்சிமாக நொடிக்கு 60 frame-ஆகவும் இருக்கிறது(0.75 – 60 fps)


இதன் shutter : Electronic shutter, 5.0° to 359.0° கோணங்களின் மாற்றியமைக்க முடியும். (shutter-இன் கோணங்களை மாற்றியமைப்பதின் மூலம் சில சுவாரசிமான பிம்பங்களை உருவாக்க முடியும். இதுவும் தனி கட்டுரைக்கான களம்)






மற்ற 'ARRI' டிஜிட்டல் கேமராக்களில் இருப்பதைப்போலில்லாமல் இதில் 'ARRI Electronic Viewfinder EVF-1' இணைக்கப்பட்டுள்ளது. மற்ற D20, D21 டிஜிட்டல் கேமராக்கலில் 'Optical Viewfinder' உள்ளது. இதில் இந்த வசதி குறை என நான் நினைக்கிறேன். 'Optical Viewfinder' தான் காட்சியின் தரத்தை கட்டுப்படுத்துவதில் அதிக பயன்படும் என்பது என் நடைமுறை அனுபவம். இந்த கேமராவை பயன்படுத்தி பார்த்தால் தான் இதைப்பற்றி மேலும் அறிந்துக்கொள்ள முடியும்.


இப்போதெல்லாம் ஒரு பொருளை வாங்கினால் அடுத்த நாளே அதனுடைய அடுத்த 'version' கருவிகள் வந்து விடுகின்றன. அப்படியிருக்க புதிய கருவிகளின் மீது பணம் போட தயக்கம் காட்ட வேண்டியதாக இருக்கிறது. நீங்கள் 'mobile phone' வாங்கினீர்கள் என்றால் அடுத்த வாரமே அதைவிட தறம் மிகுந்த விலை குறைந்த போன்கள் வந்துவிடுவதை அறிவீர்கள். அதேபோல் தான் தொழில்நுட்ப கருவிகளிலும் நிகழ்கிறது. இதை சமாளிக்க இந்த கேமராவின் பாகங்கள் மாற்றி அமைக்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் புதிய கருவி பாகங்கள் வரும்போது அதை மட்டும் வாங்கி மாற்றி அமைத்துக்கொள்ளலாம். முழு கேமராவையும் வாங்க வேண்டியது இல்லை.



இந்த கேமராவில் 1.'பிம்பங்களை சேமிக்கும் பகுதி'(Storage Interface Module)
2.'மின்னனு இயந்திரப்பகுதி'(Electronics Interface Module) மற்றும்
3.'லென்ஸ் இணைப்பு பகுதி'(Exchangeable Lens Mount (ELM)) போன்றவைகளை விஞ்ஞான வளர்ச்கேற்ப மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.


முடிவாக இந்த கேமரா இப்போது தான் அறிமுகப்படுத்தப்பட்டாலும், இதனுடைய துணைக்கருவிகள அனைத்தும் ஏற்கனவே உலகமுழுவதும் பயன்பாட்டில் இருப்பவைதான். அதனால் இந்த கேமராவை பயன்படுத்துவது எளிதாகிறது. உலகின் எந்த மூலையிலும் இந்த கேமராவை பயன்படுத்தலாம் என்பது 'ARRI' நிறுவனத்தின் உறுதிமொழி. இதை நாம் நம்பலாம் ஏனெனில் 'ARRI' நிறுவனம் நம்ப தகுந்த தரமான் கருவிகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் என்பது உலகமுழுவதும் நம்பப்படுகிற ஒன்று.