இன்றைய
நிலவரப்படி காட்சியை பதிவுசெய்யும் தொழில்நுட்பத்தில் பலவகைகள்
இருக்கிறது. ஃபிலிம்(Film), டிஜிட்டல்(Digital) என்ற இரண்டு பொது
பிரிவுக்குள் அவற்றை அடக்கிவிட முடிந்தாலும் அதற்குள் நிறைய பிரிவுகள்
இருக்கிறது.
ஃபிலிம் என்று பொதுவாக அழைத்துவிட்டாலும், 65mm, 35mm, 16mm படச்சுருள்களில் எதை பயன்படுத்தினோம் என்பதைப்பொருத்து நம் காட்சியின் தரம் இருக்கிறது. ஒருவிதத்தில் இவை ஒவ்வொன்றுமே மற்றவையைவிட பாதியளவு தரம் வித்தியாசம் கொண்டவை. ஒரு பிம்பம் பதிவுசெய்யப்படும் பரப்பளவின் அளவு சார்ந்து தரம் வித்தியாசப்படும் என்பது நாம் அறிந்ததுதான். அதாவது 65mm ஃபிலிமை விட 35mm ஃபிலிம் என்பது பாதி அளவு சிறியது, அதனால் பிம்பம் பதியப்படும் பரப்பளவு குறைகிறது. அதைச்சார்ந்து 'Image resolution' குறைகிறது. இது பிம்பதின் காட்சி தரத்தை குறைக்கும். இதேதான் 35mm ஃபிலிமுக்கும் 16mm ஃபிலிமுக்குமான வித்தியாசம்.
என்றாலும் 35mm ஃபிலிமின் தரம் நமக்கு போதுமானது என்பதினால் 65mm ஃபிலிமை நாம் அவ்வளவாக பயன்படுத்துவதில்லை, இடையில் சில வருடங்கள் பயன்படுத்தியதோடு சரி.(அகண்ட திரையில் பிரம்மாண்ட காட்சிகளை காட்டுவதின் மூலம் பார்வையாளனை பிரமிப்பில் ஆழ்த்தி திரையரங்கை நோக்கி இழுத்துவந்துவிட வேண்டும் என்பதினால்). ஆனால் 16mm ஃபிலிமை பயன்படுத்துவது என்பது உண்மையில் நம் காட்சி தரத்தை பாதிக்க கூடியது, அதிலிருந்து பெறப்படும் காட்சிதரம்(Image resolution) என்பது 35mm ஃபிலிமோடு ஒப்பிட்டால் குறைவுதான்.
இந்த குறைபட்ட தரம் சில நேரங்களில், சில காட்சியமைப்புக்கு போதுமானதாக இருந்தாலும் பல காட்சிகளுக்கு, கதை சொல்லலுக்கு போதுமானதாக இருக்காது என்பதும் உண்மை. உதாரணத்திற்கு குறைந்த வெளிச்சம் கொண்ட காட்சியமைப்பு, காதல் போன்ற மென்மையான உணர்ச்சிகளை காட்சியாக வெளிப்படுத்தும்போதும், 'Low resolution'-னால் ஏற்படும் 'Grains' பார்வையாளன் காட்சியில் முழுமையாக உள்செல்லுவதை தடுக்கிறது. சிறந்த நடிப்பும், சிறந்த காட்சிபடுத்துதலும், சிறந்த இசையும் இந்த குறையை நிவர்த்தி செய்துவிடலாம் என்றாலும், இந்த 'Low resolution/ Grains' என்பது 16mm ஃபிலிமிலிருக்கும் தவிர்க்கமுடியாத குறை. இதையெல்லாம் மீறி நாம் 16mm-இல் படமெடுப்பது என்பது தவிற்க்க முடியாத 'விட்டுக்கொடுத்தல்'(Compromise) தான்.
அதேப்போல் 'டிஜிட்டல்' தொழில்நுட்பம் என்பது பல பிரிவுகளைக்கொண்டது. 'அனலாக் விடியோவை'(VHS,Beta) தவித்துவிட்டு பார்த்தால் 'Digi-beta'வில் ஆரம்பித்து 'DV','DVC Pro','XD','HDV','HD' என ஒரு நீண்ட தொடர் தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்கிறது. (இவற்றிற்கு இடையேயான வித்தியாசத்தை விளக்க ஒரு தனி கட்டுரையே எழுதவேண்டும். அதை பிறகு எழுதுகிறேன். இப்போதைக்கு வேண்டுமானால் இணையத்தில் தேடிப் படித்துக்கொள்ளுங்கள்)
திரைப்படத் தயாரிப்பில் செலவை குறைக்கவேண்டும் என்ற தேவை வரும்போதெல்லாம் யோசிக்கப்படும் பல மாற்று காரணிகளில் ஃபிலிமுக்காக செலவிடப்படும் பகுதியை குறைக்கவேண்டும் என்பதும் ஒன்று. ஃபிலிமுக்கு பதில் 'டிஜிட்டலை' பயன்படுத்தலாம் என்கிற யோசனை பலகாலமாக இருந்து வந்திருக்கிறது. டிஜிட்டல் என்பது வளர்ந்துவரும் தொழில்நுட்பம் மேலும் விலை குறைந்த தொழில்நுட்பம் என்பதினாலும், அதை எப்போதும் பரிசினலனை செய்து வந்திருக்கிறார்கள். ஆனால் 2005/2007 வரைக்கும் கூட டிஜிட்டல் தொழில்நுட்பம் பெரிதாக நம்பிக்கை தரும்வகையில் அல்லது போதுமான தரத்தில் முன்னேறி இருக்கவில்லை.
'StarWars' போன்ற சிலபடங்களில் டிஜிட்டல் தொழில்நுட்பம்(DV/24p) பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அவையெல்லாம தேவைக்கருதியும் பரிச்சாத்த முறையிலுமே பயன்படுத்தப்பட்டது. பின்பு 'HD' தொழில்நுட்பம் திரைப்படத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
கமலின் 'மும்மை எக்ஸ்பிரஸ்' DV/24p(Panasonic AG-DVX100 அல்லது AG-DVX102A) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடுக்கப்பட்டது. ஒளிப்பதிவு செய்தது ஒளிப்பதிவாளர் சித்தார்த் அவர்கள். அந்த கேமராவில் நொடிக்கு 24 பிரேம்கள் எடுக்க முடியும் என்பதே அதை பயன்படுத்தி அப்போது திரைப்படம் எடுக்க முயன்றார்கள்.
இந்தியாவில்/தமிழில் முதல் 'HD' படம் ஒளிப்பதிவாளர் 'பி.சி.ஸ்ரீராம்' இயக்கி ஒளிப்பதிவு செய்த 'வானம் வசப்படும்(2004)'. அதில் 'Panasonic AJ HDC 27'(720p) பயன்படுத்தப்பட்டது என நினைக்கிறேன். பின்பு இதே கேமரா பயன்படுத்தப்பட்டு 'சேரன்' இயக்கி 'M.S.பிரபு' அவர்கள் ஒளிப்பதிவு செய்த 'தவமாய் தவமிருந்து' திரைப்படம் எடுக்கப்பட்டது. சேரனின் முந்திய படமான 'ஆட்டோகிராப்பில்' இந்த கேமரா சில காட்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டது, ஒளிப்பதிவு செய்தது ஒளிப்பதிவாளர் 'துவாரகநாத்' அவர்கள்.
ஆனாலும் அப்போதைய HD தொழில்நுட்பம் திருப்திகரமாக இருக்கவில்லை என்பதுதான் உண்மை. ஃபிலிம் தரத்திற்கு இல்லையென்றாலும் குறைந்தபட்சம் அதன் அருகில் வந்துவிடும் தொழில்நுட்பமாக வளர்ந்துவிடகூடிய சாத்தியம் கொண்டாத கருதப்பட்டது.
ஒருபுறம் ஃபிலிமுக்கு மாற்றாக டிஜிட்டல் ஆலோசிக்கப்பட்ட அதே நேரத்தில் 'DI' மற்றும் 'டிஜிட்டல் திரையிடல்'(Digital Projection) போன்ற தொழில்நுட்பங்களும் நடைமுறைக்கு வந்தன. இந்த தொழில்நுட்பங்களின் சாத்தியங்களை பயன்படுத்திகொண்டு திரைப்படத்தயாரிப்பில் செலவை குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த காலகட்டத்தில் தான் 'RED ONE' கேமராவைப் பற்றி பேச்சு அடிபட ஆரம்பித்தது. அதன் தயாரிப்பாளர்கள் சொன்ன அதன் தொழில்நுட்பம் முதலில் நம்பமுடியாததாகவும், சாத்தியம் இல்லாததாகவும் கருதப்பட்டது.
'HD' தொழில்நுட்பம் என்பது '1920 X 1080' 'ஃபிக்சல் ரேஷியோவை'(Pixel Ratio) நோக்கி இருந்தபோது 'RED ONE' கேமரா '4096 X 2304' ஃபிக்சல் ரேஷியோவை(4K Resolution) தரும் என்று சொல்லுப்பட்டதும், கேமராவின் அளவும், அதன் விலையும் நம்பமுடியாததாக கருதப்பட்டது.
2005-இல் 'RED ONE'க்கான அறிவிப்பும் வேலையும் துவங்கப்பட்டாலும், 2007-இல் முதல் 'RED ONE' கேமரா தொழில்ரீதியான நடைமுறைக்கு வந்தது. 'RED ONE' கேமரா மற்ற டிஜிட்டல் கேமராக்களைப்போன்று 'HD' தொழில்நுட்பத்தில் இல்லாமல் 'RAW' format தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது. புகைப்படத்துறையில் பயன்பாட்டிலிருந்த 'RAW' தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதும், 4K ரெசுலுசைனை கொடுத்ததும் 'RED ONE'-இன் சிறப்பு அம்சங்கள்.
'RED ONE' அதன் அறிமுகப்படுத்ததலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மேம்படுத்திக்கொண்டு வந்திருக்கிறது. 4Kவிலிருந்து 4.5K(4520 x 2540 pixels) மேம்பட்டதும், பதிவுசெய்யும் கோடாக்கை மாற்றியும்(REDCODE 42), குறைந்த வெளிச்சத்தில் படம்பிடிக்கும் தகுதியை அதிகபடுத்தியும்(Mysterium-X) தன்னை வளர்த்துக்கொண்டே வருகிறது.
தமிழில் 'ரெட் ஒன்' கேமராவைப் பயன்படுத்தி பலப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. 'உண்னைப்போல் ஒருவன்', 'தமிழ்படம்', 'திருதிரு துருதுரு' மற்றும் 'மன்மத அம்பு' போன்ற படங்கள் முழுமையாக 'ரெட் ஒன்' பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆங்கிலத்தில் பலப்படங்கள் 'ரெட் ஒன்'-ஐப் பயன்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது. அதில் எனக்கு ரொம்ப பிடித்தது இயக்குனர் 'Steven Soderbergh'-இன் 'சே' படம். இரண்டுபாகமாக எடுக்கப்பட்டிருக்கிறது.
தொழில்நுட்ப விவரங்கள்:
SENSOR 14 MEGAPIXEL MYSTERIUM-X™
PIXEL ARRAY 5120 (h) x 2700 (v)
S/N RATIO 66db
DYNAMIC RANGE 13+ stops
MAX IMAGE AREA 4480 (h) x 2304 (v)
LENS COVERAGE 24.2mm (h) x 12.5mm (v) x 27.3 mm (d)
DEPTH OF FIELD Equivalent to S35mm (Motion) lens
Equivalent to 16mm (Motion) lens in 2K RAW
ACQUISITION FORMATS 4.5K RAW (2.4:1)
4K RAW (16:9, HD, 2:1, and Anamorphic 2:1)
3K RAW (16:9, 2:1, and Anamorphic 2:1)
2K RAW (16:9, 2:1, and Anamorphic 2:1)
PROJECT FRAME RATES 23.98, 24, 25, 29.97 fps @ 4.5K, 4K
plus 50, 59.94fps @ 3K, 2K
DELIVERY FORMATS * 4K : DPX, TIFF, OpenEXR (RED RAY via optional encoder)
2K : DPX, TIFF, OpenEXR (RED RAY via optional encoder)
1080p RGB or 4:2:2, 720p 4:2:2 : Quicktime, JPEG
Avid AAF, MXF. 1080p 4.2.0, 720p 4:2:0 : H.264, .MP4
MONITOR OUTPUTS HD-SDI and HDMI with Frame Guides and Look Around
720p RGB or 4:2:2
SMPTE Timecode, HANC Metadata, 24-bit 48Khz Audio
DIGITAL MEDIA REDFLASH (CF) Module : (16GB Media)
RED SSD™ (64GB, 128GB, 256GB Capacity)
REDCODE™ 12-bit RAW : RC28, 36, 42 Quaity Levels
1-30 fps 4.5K, 4K
1-60 fps 3K
1-120 fps 2K
AUDIO 4 channel, uncompressed, 24 bit, 48KHz.
MONITORING OPTIONS RED LCD 5" Flat Panel Display
RED PRO LCD 7" Flat Panel Display
BOMB EVF™ High Definition Viewfinder
REMOTE CONTROL USB-2, GPI Trigger
WEIGHT 10lbs. Body
CONSTRUCTION Aluminum Alloy
TEMPERATURE RANGES Operating Range: 0˚C to +40˚C (32˚F to 104˚F)
Storage Range: -20˚C to +50˚C (-4˚F to 122˚F)
* FROM REDCINE-X
அடுத்த கட்டம்: ரெட் ஒன் கேமரா அடுத்தகட்டத்தை நோக்கியும் நகர துவங்கி விட்டது. Canon 5D/7D போன்ற போட்டியாளர்களை சமாளிக்க மேலும் புதியவகை கேமராக்களை, வசதிகளை அளிக்கிறது. அந்த வகையில் அதன் இரண்டு புதிய கேமராக்களான 'EPIC' மற்றும் 'SCARLET' பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

AG-DVX102A |
AG-DVX100 |

Panasonic AJ HDC 27 |