Tuesday, 19 March 2013

Red One 'EPIC' - ஒரு அறிமுகம்:


"புதிய தொழில்நுட்பம் உங்கள் மீது உருண்டோடும் போது, நீங்கள் அந்த உருளையின்(ரோட் ரோலரின்) ஒரு பகுதியாக இல்லாவிட்டால் தரையின் ஒரு பகுதியாகி விடுவீர்கள்"


“Once a new technology rolls over you, if you're not part of the steamroller, you're part of the road.” - Stewart Brand
---------------------------------------------------------------------------------------------------------------
திரைப்படத் துறையில் நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக 'டிஜிட்டல்' திரைப்படம் என்னும் நுட்பம் வளர்ந்துவரும் வளர்ச்சியை நாம் கவனிக்க தவறிவிடக்கூடாது. 'டிஜிட்டல்' திரைப்படம் என்பது ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, வண்ணம் ஒழுங்கமைத்தல்(color correction) மற்றும் திரையிடல் என அனைத்தையும் தான் குறிக்கிறது.

ஒரு திரைப்படத் தயாரிப்பின் மொத்த வேலைகளையும் 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தில் செய்துவிட முடியும் என்பது என்றைய நிதர்சனம். 'டிஜிட்டல்' தொழில்நுட்பம் இத்தனை தூரம் வளர்ந்துவிட்ட பிறகும், நாம் ஏன் அதை செயல்படுத்தாமல் அதைப்பற்றி பேசிக்கொண்டு மட்டும் இருக்கிறோம்? என்பது மிக முக்கியமான கேள்வி.

எது எப்படியோ, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பிம்பத்தை பதிவுசெய்ய இன்னும் இங்கே தயக்கம் இருக்கிறது. அதாவது ஃபிலிமில் படமெடுப்பதிற்கு பதிலாக டிஜிட்டலை பயன்படுத்துவதிற்கு கொஞ்சம் தயக்கம் காட்டப்படுகிறது. இங்கே குறைந்த செலவில் படமெடுப்பதிற்குகாக மட்டுதான் டிஜிட்டலை பயன்படுத்துகிறார்கள். பொருளாதாரம் பிரச்சனை இல்லை என்றால் ஃபிலிமையே எல்லோரும் முன்மொழிகிறார்கள்.

ஒரு துறையில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அத்துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதாக இருக்கும், இருக்கவேண்டும். அந்த வகையில் இந்த டிஜிட்டல் தொழில்நுட்பம் திரைப்படத்துறையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் விதத்தில் இருக்கிறதா? இருக்கிறது என்றால் ஏன் இந்த தயக்கம்? இந்த தயக்கம் நியாயமானதுதானா? போன்ற கேள்விகள் தொங்கி நிற்கத்தான் செய்கின்றன.

மறுக்க முடியாத உண்மை ஒன்று இருக்கிறது. ஃபிலிம் தரத்தை இதுவரை எந்த டிஜிட்டல் தொழில்நுட்பமும் சந்தேகத்திற்கு இடமின்றி சமன் செய்யவில்லை. ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோமே, டிஜிட்டல் தொழில்நுட்பம் முன்பே கண்டுபிடிக்கப்பட்டிருந்து, நாம் இந்தனை காலமாக அதைத்தான் பயன்படுத்தி வந்திருந்தோமென்றும், இப்போது புதிதாக 'ஃபிலிம்' தொழில்நுட்பம் கண்டு பிடிக்கப்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்றால்? நாம் அத்தனைபேரும் 'ஃபிலிமை' தலையில் தூக்கி வைத்து கொண்டாடி இருப்போம். ஆகா இது ஒரு அற்புதம் என்று அதிசயப்பட்டிருப்போம்.

உண்மைதான், ஃபிலிம் அத்தனை சக்தி வாய்ந்ததுதான், பல சாத்தியங்களை 'காட்சி பதிவுசெய்தலில்' அது கொடுக்கிறது. அதை யாரும் மறுத்துவிட முடியாது. என்றாலும் நாம் அதை தாண்டி செல்லவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். முந்தைய படி எத்தகைய உறுதியானதாகிருந்தாலும் நாம் அடுத்த படியில் காலெடுத்துவைத்துதான் ஆக வேண்டும், அப்போதுதான் மேலேற முடியும், அடுத்த கட்டத்திற்கு நகர முடியும். அதை தவிர்த்து முந்தைய படி பாதுகாப்பாக இருக்கிறது, நான் இங்கேயே நின்றுக்கொள்கிறேன் என்று சொல்லுவது அவரவர் சவுகரியம், ஆனால் அது விவேகமோ வளர்ச்சியோ ஆகாது.

இப்படி நாம் பலவற்றை சிறந்தது என்றாலும் கடந்துவந்திருக்கிறோம், நம் வாழ்கையிலேயே எண்ணற்ற உதாரணங்கள் உண்டு, மண்பாண்ட சமையல், கைகுத்தல் அரிசி, பட்டுபுடவை, மருத்துவம் என பல நல்ல விஷயங்களை நாம் கால ஓட்டத்தில் தாண்டி வந்திருக்கிறோம். அதற்கான நியாயமான காரணங்களும் உண்டு என்பது நம் நம்பிக்கை.

அதேபோல் தான் ஃபிலிம் எத்தகைய சிறப்பு வாய்ந்ததாகிருப்பினும் விரைவில் நாம் அதை தாண்டி வந்துவிட வேண்டிய சூழலில் இருக்கிறோம்.

இத்தகைய பீடிகையும், சமாளிப்பும், சிபாரிசும் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு தேவையா? அது அத்தகைய நிலையிலா இருக்கிறது?. அதன் தரம் சிபாரிசு தேடும் நிலையில் தான் இருக்கிறதா? என்று என்னை கேட்டால்...அப்படி இல்லை என்றுதான் சொல்லுவேன்.

டிஜிட்டல் தொழில்நுட்பம் ஃபிலிம் தரத்திற்கு சில காரணிகளில் வேண்டுமானால் ஈடுசெய்யாமல் இருக்கலாம், ஆனால் பெரும்பாண்மையானவற்றில் ஈடுசெய்துவிட்டது என்பதும், சில விதங்களில் ஃபிலிமை விட டிஜிட்டல் மேம்பட்டது என்பதும், பல சாத்தியங்களுக்கு வழியேற்படுத்தி கொடுத்திருக்கிறது என்பதும் இன்று உலகம் ஒத்துக்கொண்ட உண்மை. அதுவும் குறைந்த விலையில்.

டிஜிட்டல் திரைப்படத்தயாரிப்பை தரத்தோடு செய்ய முடியும் என்ற எண்ணம் 'ரெட் ஒன்'(RED ONE) வருவதிற்கு முன்பாக வெறும் நம்பிக்கையாக மட்டுதான் இருந்தது. 'சோனி' 'பேனாசோனிக்' போன்ற நிறுவனங்கள் 'HD' தொழில்நுட்பத்தை முயன்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் 'ரெட் ஒன்' அறிமுகப்படுத்தப்பட்டது(2007).

'ரெட் ஒன்' 'HD' தொழில்நுட்பத்தை தாண்டி டிஜிட்டல் திரைப்படத்தை கொண்டுச்சென்றது. அது 'RAW' format-ஐ பயன்படுத்தி 4K தரத்தை எட்டியது என்பதை முந்தைய கட்டுரையில் பார்த்தோம்.

இப்போது 'SONY' (F35), 'ARRI'(D21, Alexa), 'Panavision'(GENESIS) போன்ற பல நிறுவனங்கள் டிஜிட்டல் கேமராக்களை அறிமுகப்படுத்திவிட்டன.


SONY F35
ARRI Alexa 
ARRI D-21

PANAVISION GENESIS
இதில் இடைசொருகளாக, எதிர்பாராத ஆச்சிரியமாக 'Canon' நிறுவனம் 'EOS 5D/7D' மார்கொட்டுக்கு கொண்டுவந்து இன்பதிர்ச்சி கொடுத்திருக்கிறது. சிறிய வடிவத்தில் போதுமான தரம் என்பது இதன் சிறப்பம்சம்.

CANON 5D

இந்நிலையில் 'ரெட் ஒன்' அது அறிமுகமானபோது ஏற்படுத்திய அதே போன்றதொரு ஆச்சிரியத்தோடு அதன் இரண்டு புதிய கேமராக்களை அறிமுகப்படுத்துகிறது.

Red One 'EPIC':

'ரெட் ஒன்' கேமராவில் மூன்றில் ஒருபங்கு அளவு கொண்ட சிறிய கேமரா இது. ஆனால் அதை விட அதிக தொழில்நுட்ப வளர்ச்சி கொண்டது.



* 5K ரெசுலூஷன்.(5120 x 2700 PIXELS)

*120fps - நொடிக்கு 120 ஃபிரேம்ஸ் வரை படம் பிடிக்கலாம்(5K). 225fps வரை 2K-இல் படம்பிடிக்கலாம்(UP TO 225FPS @ 2K)

* ஒவ்வொரு ஃபிரோமும் 14MP கொண்டது.



*புகைப்படம் எடுக்கவும் பயன்படுத்தமுடியும்.

*13 stops 'native dynamic range' கொண்டது.

*3D படபிடத்தலுக்கும் பயன்படுத்தலாம்.

*'Multi-camera synchronization'

*MYSTERIUM-X® - என்பது அதன் புதிய 'CCD'. ஒளியை பதிவுசெய்ய பயன்படும் சென்சார்.

*இதன் format ஆன 'R3D'-ஐ கிழே இருக்கும் எல்லாம் எடிட்டிங் மெம்பொருளையும் பயன்படுத்தி எடிட் செய்யலாம். (Final Cut Pro, Avid DS, Adobe Premiere and AfterEffects, Sony Vegas, Assimilate Scratch, Filmlight Baselight, Quantel Pablo, Da Vinci, Nuke, REDCINE-X, ROCKETCINE-X, DVS Clipster, Nucoda, Mystika, Storm)


* லென்ஸ் மௌண்ட், பேட்டரி, சேமிக்கும் சிப், ஹார்டிஸ்க் என எல்லாம் பாகங்களும் தேவைக்கு ஏற்றபடி மாற்றி கொள்ள முடியும்.

*எலட்டரானிக் ரெட் லென்ஸையோ அல்லது 'கெனான்' அல்லது 'நிக்கான்' லென்ஸையோ பயன்படுத்தி 'Auto Focus' 'Auto Exposure' வைக்கலாம்.

*HDRx™ தொழில்நுட்பத்தில் 18 stops ஒளிவித்தியாசம் கொண்ட காட்சிகளை படம்பிடிக்கமுடியும்.

HDRx™ தொழில்நுட்பம் என்பது 'High-dynamic-range imaging' என்பதின் சுருக்கம். அதாவது ஒரு வெளிபுற படக்காட்சியை பதிவுசெய்ய முயற்சிக்கு போது, அங்கே பல அளவுகளில் ஒளி மாறுபட்டிருந்தால் அதை எல்லாம் ஒளி அளவுகளையும் நாம் பதிவுசெய்ய முடியாது. ஏனெனில் அதிக ஒளியை சரியாக பதிவுசெய்ய நாம் முயன்றால் குறைந்த ஒளிப்பகுதி பதிவாகாது, குறைந்த ஒளியை பதிவுசெய்ய முயன்றால் அதிக ஒளிப்பகுதி 'Bleach' ஆகிவிடும்.



இந்த குறைய பாட்டை போக்க 'Still Photography'இல் 'HDR' தொழில்நுட்பத்தை கொண்டுவந்தார்கள். இதன் மூலம் பல மாறுபட்ட அளவுகள் கொண்ட ஒளிகளை தனித்தனி படங்களாக எடுத்துக்கொண்டு, பிறகு கணினியை பயன்படுத்தியோ அல்லது அந்த கேமராவில் இருக்கும் வசதியை பயன்படுத்தியோ ஒரே புகைப்படமாக மாற்ற முடியும். இதன் மூலம் பல அளவுகளில் ஒளியமைப்பு கொண்ட காட்சியை சிறப்பாக பதிவுசெய்யமுடியும். இந்த தொழில்நுட்பத்தைதான் 'எபிக்' பயன்படுத்துகிறது.







ஸ்கார்லெட் இன்னும் வெளிவரவில்லை-விரைவில்

 'Lord of the Rings film trilogy' மற்றும் 'King Kong' போன்ற படங்களிம் இயக்குனரான 'Peter Jackson' தன் அடுத்தப்படம் 'THE HOBBIT'-ஐ 'எபிக்'-ஐ பயன்படுத்தி எடுக்கிறாராம். அது ஒரு 3D டிஜிட்டல் படம்.



எல்லாம் சரி 'ஐயன்ஸ்டினின்' இந்த வார்த்தைகளை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

"I am enough of an artist to draw freely upon my imagination. Imagination is more important than knowledge. Knowledge is limited. Imagination encircles the world." -Albert Einstein