HD தொலைக்காட்சியைப்பற்றி(HDTV) தெரிந்துக்கொள்ள, நாம் முதலில் 'DIGITAL' பற்றி தெரிந்துக்கொள்ளவேண்டும். அதற்கு முன், 'டிஜிட்டல்'(Digital) தொழில்நுட்பத்தில் பயன்பாட்டிலிருக்கும் சில தொழில்நுட்பப் பெயர்களுக்கு அர்த்தம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
வீடியோ பிம்பங்களை, குறிப்பாக தொலைக்காட்சிப் பிம்பங்களைக் குறிப்பிடும் போது, மூன்று முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிடுவார்கள். ஒரு வரிசையில்(Line) எத்தனை 'பிக்சல்கள்' உள்ளன என்பதும் ஒரு பிம்பத்தில் எத்தனை வரிசைகள்(Lines) உள்ளன என்பதும் அது எவ்வகையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது என்பதாக. அதாவது Progressive(P) or Interlaced(I) பிம்பமா அது என்பதும் ஒரு நொடியில் வரும் 'Fields' எண்ணிகையும் சேர்த்து குறிப்பிடுவார்கள்.(Number of pixels per line x number of lines per frame/vertical refresh rate (in Hz) progressive or interlaced )
1920 x 1080/50i என்பதில் 1920 x 1080 என்பது அப்பிம்பத்தில் உள்ள பிக்சல்களின் எண்ணிகையை குறிக்கிறது. 50i என்பது ஒரு நொடிக்கு 50 'interlaced' fields (per second) என்பதைக் குறிக்கிறது.
பிக்சல்ஸ்(Pixels): தொலைகாட்சி பெட்டியை 'ON' செய்தால் படம் வராமல் இருக்கும் போது புள்ளிப் புள்ளியாக வருவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அப்புள்ளிகள், மின்சாரத்தால் தூண்டப்பட்டு உருவாகும் 'எலட்டாரனிக்' கதிர்கள். அது தொலைக்காட்சிப் பெட்டியின், திரை முழுவதையும் நிரம்பி இருப்பதை பார்த்திருப்பீர்கள். அத்துகள்கள் தான் பிம்பத்தின்(Image) தகவல்களை கொண்டு வருகின்றன. அதன் மூலமாகவே நாம் படத்தைப் பார்க்க முடிகிறது. இது 'அனலாக்'(Analog) முறை.
இதேப்போல 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தில், ஒரு பிம்பத்தை புள்ளிகளால் பிரிக்கிறார்கள். வரிசையாக அடுக்கப்பட்ட புள்ளிகள். குறுக்கும் நெடுக்குமாக வரிசைப்படுத்தப்பட்ட புள்ளிகள். இந்த ஒவ்வொரு புள்ளியும் ஒரு 'பிக்சல்'(Pixel) என அழைக்கப்படுகிறது. ‘Picture cell’ or ‘Picture element' என்பதன் சுருக்கமே 'Pixel'.
இதில் நீலகட்டம் ஒரு பிக்சல், சிவப்பு கட்டம் ஒரு பிக்சல் |
பிம்பத்திலிருக்கும் ஒரு புள்ளியின் தகவல்களை அது கொண்டிருக்கும். பிம்பத்தின் வண்ணம் மற்றும் வெளிச்ச அளவுகளை (R, G, B, Chrominance and Luminance) அது கொண்டிருக்கும். இந்த ஒவ்வொரு தனிப்பட்ட 'பிக்சல்கள்' தாங்கியுள்ள தகவல்களைக் கொண்டே ஒரு பிம்பம் (Image/Picture) உருவாக்கப்படுகிறது. இப்புள்ளிகள், குறிப்பிட்ட எண்ணிக்கையில் கிடைமட்டமாகவும் (Horizontal) செங்குத்தாகவும் (Vertical) அடுக்கப்பட்டிருக்கும்.
கிடைமட்டமாக(Horizontal) அதாவது அகலம்(Width) மற்றும் செங்குத்தாக (Vertical) அதாவது உயரத்திலும் (Height) இருக்கும் 'பிக்சல்களின்' எண்ணிக்கையை குறிப்பது. 720 x 576 என்பதில் அகலத்தில் 720 பிக்சல்களும் உயரத்தில் 576 பிக்சல்களும் உள்ளது என்பதை குறிக்கிறது.
'ரெசுலுஷன்'(Resolution): பிக்சல்ஸ்(Pixels)-களின் எண்ணிக்கையைக்கொண்டு அப்பிம்பத்தின் அடர்த்தியை குறிப்பது. பிக்சல்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அதன் அடர்த்தி அதிகரித்து அதனால் அப்பிம்பதின் துல்லியம் (Information: Color,Brightness,Sharpness..etc) அதிகரிக்கும்.
'இண்டர்லேஸ்'(Interlaced Scan): இரண்டு அடுத்தடுத்த வரிசையை(lines) தனித்தனியாக ‘ஸ்கேன்’ செய்வது. 1,2,3,4,5..வரிசையில் 1,3,5.. (odd number) என்பதை ஒரு தடவையும் 2,4,6..(even number) என்பதை மற்றொரு தடவையும் ஸ்கேன் செய்வது. படம் பிடிக்கும் போது இம்முறையில் பிம்பத்தின் தகவல்கள் சேமிக்கப்படுகிறன. தொலைக்காட்சியில், இவ்விரண்டு வரிசைகளின் தொடர்ச்சியான மாற்றத்தின் மூலம் பிம்பம் காட்சிப்படுத்தப்படுகிறது. ஒரு நொடிக்கு 25 frames. ஒரு ஃபிரேமை இரண்டு வரிசை(lines) பிம்பங்களாக பிரிப்பதால் (25 x 2 fields) 50i என குறிக்கப்படுகிறது.
(The vertical refresh rate shown for interlaced scans is twice the whole frame rate.two interlaced fields make up one whole frame)
'புரோகரஸிவ்' (Progressive scan): 'இண்டர்லேஸ்' ஸ்கேனைப்போலில்லாமல் மொத்த வரிசைகளையும்(lines) ஒரே தடவையில் ஸ்கேன் செய்வது. மொத்த வரிசைகளையும் ஒரே தடவையில் காட்டுவது.
NTSC: The National Television Systems Committee என்பதன் சுருக்கம். அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோ, ஜப்பான் போன்ற நாடுகளில் உபயோகப்படுத்தப்படும் 'அனலாக்' வண்ணத் தொலைக்காட்சி தொழில்நுட்பம். ஒரு நொடிக்கு எத்தனை பிம்பங்கள் திரையில் காட்டப்படுகிறது என்பதை நிர்ணயிப்பது. அந்நாடுகளில் பயன்பாட்டிலிருக்கும் மின்சாரத்தைப் பொருத்து இது மாறுபடும். (மின்சாரத்தை பற்றி தெரிந்தவர்களிடம் இதைப்பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்). நொடிக்கு 30 Frames என்ற கணக்கில் NTSC -இல் இருக்கும். '525/60 line and field format' - இதில் '525' என்பது வரிசையின்(lines) எண்ணிக்கையை குறிக்கிறது.
PAL: Phase Alternate Line என்பதன் சுருக்கம். ஐரோப்பாவின் பெரும்பாண்மையான நாடுகளில் பயன்படுத்தப்படும் 'அனலாக்' வண்ணத் தொலைக்காட்சி தொழில்நுட்பம். இந்தியாவில் இதுதான் பயன்படுத்தப்படுகிறது. நொடிக்கு 25 Frames என்ற கணக்கில் PAL அமைப்பு இருக்கும்.'625 line/50 field format'.
Note that the PAL term is frequently used to describe any 625/50I analog format – even if it is component, or in the 576/50I digital television system where PAL coding is not used.
SECAM: 'ஃபிரான்ஸில்' பயன்படுத்தப்பட்ட 'அனலாக்' வண்ணத் தொலைக்காட்சி தொழில்நுட்பம். UK மற்றும் இத்தாலி போன்ற நாடுகள் PAL தொழில்நுட்பத்திற்கு மாறுவதற்கு முன்னால் பயன்படுத்தினார்கள்.
குறிப்பு: இந்த தொழில்நுட்பங்களைப்பற்றி இன்னும் விரிவாக பார்க்க நீங்கள் ஆங்கிலத்தில் தான் படிக்க வேண்டும். இங்கே மேலோட்டமாக நீங்கள் புரிந்துக்கொள்ள கூடிய வகையில்/ தேவையான அளவில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இப்போது HD-ஐ பற்றிப் பார்ப்போம்.
HD என்பது 'ஹை டெஃபினிஷன்'(High Definition) என்பதன் சுருக்கம். 'ஹை டெஃபினிஷன்' என்றால் அதிக செறிவுள்ள அல்லது அதிக தரமுள்ள படங்கள் என அர்த்தம் கொள்ளலாம். தற்போது நம் வீடுகளிலுள்ள தொலைக்காட்சிப் பெட்டியில் வரும் படங்கள் 'SD' (Standard Definition) வகைப்படங்கள். 720 x 576 பிக்சல் பிம்பங்கள். 'டிஜிட்டல் TV (DTV/ DVD) படங்கள் 1280 x 720 பிக்சல் இருக்கும். 'HD படங்கள் 1920 x 1080i பிக்சல் கொண்டதாக இருக்கும். அதிக 'ரெசலூஷன்'(Resolution) கொண்ட படங்கள் என்பதனால் படங்கள் தெளிவாக இருக்கும்.
1280 X 720 pixels என்பது 720/60p
1920 x 1080 pixels என்பது 1080/50i
வியாபார நோக்கத்தில் சொல்லும்போது frames/fields எண்ணிகையை விட்டுவிட்டு, 'Resolution' மதிப்பில் 1080i என்கின்றனர். அதனால் தான் பிளாஸ்மா TV-களில் HDTV 1080i என குறிப்பிடுகிறார்கள்.
நம்முடைய வழக்கமான TV-யின் பரப்பளவு 4:3 என்ற 'ஆஸ்பெட் ரேஸியோ'(aspect ratio) -வில் இருக்கும். HDTV-இன் 'ஆஸ்பெட் ரேஸியோ' 16:9 பரப்பளவில் இருக்கும்.
இவ்வகை பிம்பங்களை படம் பிடிக்க CCD, CMOS, 3MOS சென்சார்கள் பயன்படுத்தப்படுகிறது. பிம்பங்களை MPEG-2, MPEF-4 / AVC, MPEG-4 AVC/H.264 போன்ற Formats -களைப் பயன்படுத்தி சேமித்து வைக்கிறார்கள். இந்த 'formats'-கள் அதிகமாக இடத்தை எடுக்காமல், தரத்தையும் குறைக்காமல் பிம்பத்தை சேமித்து வைக்க உதவுகின்றன.
SD படம்
HD படம்( not Original, just to understand)
ஒலியை பொருத்தமட்டும் பலவித 'கோடக்குகள்'(Codec) பயன்படுத்தப்படுகின்றன. 'dts' 'dolby' 'Surround Sound' 'THX' போன்ற ஒலிபதிவு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.இப்போது திரைப்படம் எடுப்பதற்கும் HD தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அவை இன்னும் கொஞ்சம் அதிக 'Resolution'-களில் படத்தை பதிவுசெய்கின்றன. 2K, 4K 'ரெசுலூஷன்'களில் படம் எடுக்கிறார்கள்.
HD தொழில்நுட்பத்திற்கான கேமராக்கள்: 'SONY', 'PANASONIC', 'RED ONE', 'ARRI D20-D21-ALEXA', 'THOMPSON GRASS VALLEY-VIPER' 'PANAVISION GENESIS' என பல நிறுவனங்களின் கேமராக்கள் பலவுண்டு.
(தற்போது Canon EOS 5D Mark II, Canon EOS 5D Mark III, Canon EOS C300, Canon EOS C500 போன்ற கேமராக்களும் பயன்படுத்தப்படுவது நீங்கள் அறிந்திருப்பீர்கள்)
வளர்ச்சி பாதை:
1950-இருந்து NTSC, PAL மற்றும் SECAM தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி 'அனலாக்' வண்ண தொலைகாட்சிகள் செயல்பட்டன.
பிற்பாடு 1983-களில் 'சேட்டர்லைட்(Saterlites) தொலைக்காட்சி வசதியெல்லாம் வந்தபோது 'Digital TV' கொண்டு வந்தார்கள். வழக்கமான 'Standard Definition' வகை பிம்பங்களை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கொடுத்தார்கள். நீங்கள் அறிந்திருப்பீர்கள் 1990-களில் 'Sun TV', தான் டிஜிட்டல் ஒளிபரப்பிற்கு மாறிவிட்டதாக விளம்பரங்கள் செய்ததை.
1990-இல் அமெரிக்காவில் HDTV 'Digital HDTV Grand Alliance' அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் பொதுமக்களுக்கான HDTV அமெரிக்காவில் July 23, 1996 துவங்கப்பட்டது.
ஐரோப்பா நாடுகளில் January 1, 2004 முதல் HDTV ஒளிபரப்பப்பட்டது. 2009-இல் 114 HD தொலைக்காட்சி ஒளிப்பரப்பு இருக்கிறது. 6 million பார்வையாளர்கள் HDTV-க்கு இருக்கிறார்கள். 2013 -இல் 24.7 million பார்வையாளர்களாக அதிகரிக்கும் என கணக்கிட்டிருக்கிறார்கள்.
நம்ம ஊருக்கு இப்போதுதான் வந்து சேந்திருக்கிறது.
HD-யும் திரைப்படங்களும்:
திரைப்படங்களைப் பொருத்த மட்டில், HD பயன்படுத்தி ஹாலிவுட்டில் பலப் படங்கள் எடுத்துவிட்டார்கள். பிரபல இயக்குனர் 'மைக்கேல் மேன்'( ALI படத்தின் இயக்குனர்) தன்னுடைய 'Collateral' மற்றும் 'Public Enemies' ஆகிய படங்களை HD-இல் எடுத்தார். இரண்டு படங்களிலும் HD-யின் சிறப்பம்சங்களைப் பயன்படுத்தினார். இதைப் பற்றி தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம். அவ்வளவு தகவல்கள் உள்ளன.
தமிழில் முதல் படம் பி.சி.ஸ்ரீராம் எடுத்த 'வானம் வசப்படும்' . அப்புறம் சேரனின் 'தவமாய் தவமிருந்து' -இதன் ஒளிப்பதிவாளர் M.S.பிரபு அவர்கள். இப்போது நிறைய படங்கள் வந்துவிட்டன. HDV படம் கூட எடுத்துவிட்டார்கள். கமலின் 'உன்னைப்போல் ஒருவன்' RED ONE-இல் எடுக்கப்பட்டது.
தமிழுல் முழுக்க முழுக்க டிஜிட்டலில்(RED ONE) எடுத்து டிஜிட்டலிலேயே திரையிடப்பட்ட படம் ' திருதிரு துருதுரு'. இதன் இயக்குனர் 'நந்தினி'. ஒளிப்பதிவாளர் 'சுதிர் சவுதிரி'.
'வெண்ணிலா கபடி குழு'-வின் ஒளிபதிவாளர் 'லட்சுமணன்' இப்போது ARRI D21-இல் படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்.
வருங்காலம் HD தொழில்நுட்பமாக மாறிக்கொண்டு வருகிறது. நீங்களும் தயாராகிக்கொள்ளுங்கள்.