Tuesday, 19 March 2013

S16mm Vs 35mm


இப்போதெல்லாம் திரைப்படம் தயாரிப்பில் செலவைக் குறைக்க முயற்சிக்கும் பல வழிகளில் ஒன்று "Digital"ல் எடுக்கலாம், "super 16"னில் எடுக்கலாம், "Red One"ல் எடுக்கலாம் என்ற யோசனை முன்வைக்கப்படுகிறது. அதில் super 16mm(s16)க்கும், நாம் வழக்கமாக பயன்படுத்தும் 35mm இடையேயான வித்தியாசத்தை தெரிந்துக்கொள்வோம்.


Super 16mm vs 35mm


நாம் வழக்கமாக 35mm கேமராவை பயன்படுத்துகிறோம்.  அதாவது 35mm(மில்லி மீட்டர்)பரப்பளவைக்கொண்ட ஃபிலிமை(film) பயன்படுத்துவதினால் இந்த பெயர். 35mm ஃபிள்மைப் பயன்படுத்தி படம் எடுக்கப் பயன்படும் கேமராக்களை 35mm கேமரா என்கிறோம்.
35mm ஃபிலிம் இது.


S16mm என்பது, 35mm ஃபிலிமில் பாதி அளவு பரப்பளவு கொண்டது. S16mm ஃபிலிமைப் பயன்படுத்தி படமெடுக்க தனியாக S16mm கேமராக்கள் உண்டு.
16mm ஃபிலிம் இது.
400ft ஃபிலிம் ரோல்கள் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. 35மிமீ ஃபிலிமில் இரண்டுப் பக்கமும் வரிசையாக துளைகள் அமைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பிற்கள். அந்த துளைகளுக்கு "பர்ஃபரேஷன்(Perforation)" என்று பெயர். 
இந்த "பர்ஃபரேஷன்(Perferation)"கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் அமைக்கப்பட்டிருக்கும்.  இந்த துளைகள், கேமராவில் லென்சுக்கு பின்புறம் பிம்பம் பதியுமிடத்தில் ஃபிலிமை நிலையாக நிறுத்த பயன்படுகிறது. ஒரு பிம்பம், இந்த துளைக்களின்(Perforation) வரிசையில் நான்கு துளைகளுக்கு இடைப்பட பரப்பளவில் பதிக்கப்பட்டுகிறது. 
அதாவது ஒரு frame க்கு 4 Perferation தேவைப்படுகிறது. 


இதுவே 16mm ஃபிலிமில் ஒரு பக்கமட்டுமே இந்த துளைகளிருக்கும். அதே போல் ஒரு பிம்பமானது இரண்டு துளைகளுக்கு இடைப்பட்ட பரப்பளவில் பதியப்படுகிறது.  ஏனெனில் 35mm ஃபிலிமில் பதியும் அதே பிம்பத்தை "aspet ratio" மாற்றாமல் சிறிய 16mm ஃபிலிமில் பதியும் போது சிறிய இடம் போதுமானது. அப்படியானால் 400ft நீள 35mm ஃபிலிமை விட, 400ft நீளம் கொண்ட 16mm ஃபிலிமில் அதிகமாக பிம்பத்தை (frames) பதிக்கமுடியும் என்பது தெரிகிறது.


அதாவது
 400ft 35mm  ஃபிலிமை பயன்படுத்தி 4.26 நிமிடம் படமெடுக்கலாம். 400ft 16mm ஃபிலிமை பயன்படுத்தி 11 நிமிடம் படமெடுக்கலாம்.


1 foot of 16mm is 40 frames.

100' of 16mm is 2.78 minutes, or 2 minutes and 45 seconds
400' of 16mm is 11.11 minutes, or 11 minutes and 6 seconds
1 foot of 35mm is 16 frames. 
100' of 35mm is 1,600 frames. 1,600 frames/24 fps = 66.6 seconds.
400' of 35mm is 4.4 minutes



அதனால் ஒரு படத்திற்குத் தேவையான மொத்த ஃபிலிம் ரோலில் 35mm ஃபிலிமைவிட 16mm ஃபிலிமில் பாதிப் பயன்படுத்தினால் போதும். செலவு பாதியாகிறது.  அதுமட்டுமல்லாமல் 35mm 400ft ஃபிலிம் விலையில் பாதிதான் 16mm ன் 400ft ரோல். அதனால் மீண்டும் செலவு பாதியாகிறது.
மொத்தத்தில் நான்கில் ஒரு பங்கு செலவுதான் ஃபிலிம் ரோலில் ஆகிறது.  


35mm ஃபிலிமில் எடுக்கும் படத்தை அப்படியே பயன்படுத்தி பிரிண்ட் போடலாம். 16mm ஃபிலிமை பெரிதாக்கி 35mm ஃபிலிமில் பிரிண்ட் போடவேண்டும். அதற்கு D.I என்கிற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு ஆகும் செலவிற்கு ஃபிலிம் ரோல் வாங்கும் போது மீதம் பிடித்த பணத்தை பயன்படுத்தலாம். 


அப்போ 35mm ஃபிலிமை பயன்படுத்தி படமெடுப்பதிற்கும், 16mm ஃபிலிமை பயன்படுத்தி D.I மூலம் பிரிண்ட் போடுவதிற்கும் அதே செலவுதான் ஆகிறது என்றால் 16mm ல் படமெடுப்பதில் என்ன நன்மை?


நன்மைகள்:


1. D.I க்கு ஆகும் செலவை கடைசியாக "Post Production" சமயத்தில் செய்தால் போதும்.


2. ஒருவேளை நினைத்ததைவிட அதிகமாக ஃபிலிமை பயன்படுத்த வேண்டியது வந்தால், 35mm   ஃபிலிமை விட 16mm ஃபிலிமின் விலைகுறைவு என்பதினால் செலவை கட்டுக்குள் வைக்கமுடியும். புது நடிகர்கள் பயன்படுத்தும்போதோ, புது இயக்குனர் படமெடுக்கும்போதோ சிலவேலை அதிக "Take"கள் போகவேண்டியதாகிருக்கும்.


3. 35mm ஃபிலிமைப் பயன்படுத்தி D.I செய்வதைவிட, இந்த முறையில் செலவு குறைவு.  அதாவது 35mmல் ஃபிலிமெடுக்கும் அதே செலவில் D.I  படம் செய்யமுடியும். ஃபிலிமிக்கும் D.I க்குமென தனித்தனியாக செலவு செய்யவேண்டியது இல்லை.


* ஏன் D.I. செய்யவேண்டும்? D.I. என்றால் என்ன? அதை வேறு கட்டுரையில் காண்க.

பாதகம்:
இப்படி செலவைக் குறைக்க நாம் 16mmமை  பயன்படுத்துவதில் சில குறைகளும் உண்டு. 



1.35mm விட 16mm அளவில் சிறியது என்பதினால் "Resulution" குறைகிறது,அதனால் படத்தின்(Image),மற்றும் திரைப்படத்தின் (Movie) தரம் குறையும் வாய்ப்பு உண்டு.


2. "Grains" எனப்படும் புள்ளிகள் தெரியும்.


3. குறைந்த வெளிச்சத்தில் கவனமாக படமெடுக்கவேண்டும். சில சமயங்களில் முடியாது.


4. ஒளிப்பதிவாளர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படவேண்டும், "Exposure", "Lighting" போன்றவற்றை மிகச் சரியாக செய்யவேண்டும். ஏனெனில் தவறுக்கு இடமேயில்லை. இதனால் வேலைச்செய்யும் நேரம் அதிகமாகலாம், சில சமயங்களில் நினைத்தப்படி "Low Lighting" 
செய்யமுடியாமல் போகலாம்.   


நல்லது கெட்டதும் சேர்ந்தே இருக்கிறது. செலவைப்பார்த்தால் சில விஷியங்களில் விட்டுக்கொடுக்கத்தான் வேண்டும், தரத்தைப்பார்த்தால் செலவைக் கணக்கில் எடுக்க கூடாது. நீங்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பிர்கள்? செலவா..தரமா?