Tuesday, 19 March 2013

Phantom என்னும் அதிவேகக் கேமரா:



நாம் வழக்கமாக நொடிக்கு 24 frames(24fps) என்ற கணக்கில் திரைப்படம் எடுக்கிறோம். அதை அப்படியே நொடிக்கு 24 frames-ஆக திரையிடும்போது செயல்கள் இயல்பாக இருக்கிறது. Slow motion என்பது நொடிக்கு 48frames(48fps) அல்லது அதற்கு மேலாக 150fps வரை (ARRI 435-இல் எடுக்கலாம்) எடுத்து, 24 frames-ஆகத் திரையிடும்போது செயல்கள் மிக மெதுவாக இருக்கும். நீங்கள் பார்த்திருப்பீர்கள் நம் திரைப்படங்களில் சண்டைக்காட்சிகளில் கதாநாயகன் வில்லனை ஓடிவந்து உதைப்பது, ஓங்கிக் குத்துவது என Slow motion-னில் பார்த்திருப்பீர்கள்.


அதேப்போல் நொடிக்கு 1000 frames(1000fps) என்ற அளவில் எடுத்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பாருங்கள். நம்முடைய செயல்கள் எல்லாம் இன்னும் மெதுவாக இருக்கும். மழைப்பொழிவது, கண்ணாடி கீழே விழுந்து உடைவது என பல செயல்களைத் தெளிவாக, ரசனையாகத் திரையில் பார்க்கமுடியும். அப்படி படம் எடுக்க 'Phantom' என்னும் இந்தக் கேமரா உதவும்.




'Phantom' கேமரா 'HD' தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. இது பிம்பங்களை 'RAW' files-ஆக சேமிக்கிறது. 14-bit சென்சார் 42-bit color space-இல் பதிவுச்செய்கிறது.


கேமரா, HD view finder, BNC cable,Ethernet cable,Power cables மற்றும் சில rods. இந்த கேமராவை இயக்க தேவையான கணினி, இவைதான் இந்தக் கேமராவோடு வரும் பாகங்கள்.



BNC cable கேமராவையும் மானிட்டரையும் இணைப்பதிற்கு, Ethernet cable-ஐ கொண்டு கேமராவைக் கணினியுடன் இணைக்கவேண்டும், இந்த கேமரா கணினியின் துணையுடன் இயங்குகிறது. கேமராவை இயக்க மென்பொருள் இருக்கிறது. 24V DC மின்சாரத்தில் இயங்குகிறது.


CMOS சென்சாரில் படம் பிடிக்கிறது, 2048x2048 Pixels அளவுக்கொண்ட சென்சார். பிக்சல் ரேஷியோவைப் பொருத்து நொடிக்கு எத்தனை frames என்பது மாறுகிறது. அதாவது நமக்குத் தேவையான ரெசுலொஷனைப்(Resolution) பொருத்து கேமராவின் வேகம் மாறுகிறது. முழுதாக 2048x2048 Pixels-இல் படம் எடுத்தால் 555fps வேகத்தில் படம் எடுக்கலாம். அதுவே HD 16:9 (1920 X 1080)-இல் படம் எடுத்தால் 1000fps-இல் எடுக்கலாம். HD 16:9 (1920 X 1080) என்பது நாம் வழக்கமாகப் பார்க்கும் Cinemascope திரைப்படத்திக்கு போதுமான அளவு.


எனவே இந்த கேமராவைக் கொண்டு 1000fps-இல் படமெடுக்கலாம் என பொதுவாக கூறப்படுகிறது. ஆனால் Resolution-னைப் பொருத்து இந்த கேமராவில் நொடிக்கு எத்தனை frames என்பதை மாற்றிக்கொள்ளலாம்.


Resolution  - Speed Chart (fps)


2048 x 2048     -          555
2048 x 1104 (2k 1.85)   -        1,029
2048 x 872 (2k 2.35)    -        1,302
1920 x 1080 (HDTV 16:9) -        1,052
1632 x 1200             -          946
1280 x 800              -        1,419
1280 x 720 (HDTV 16:9)  -        1,576
1152 x 896              -        1,267
800 x 600               -        1,890
640 x 480               -        2,316
512 x 512               -        2,213
256 x 256               -        4,410


கேமராவோடு 16GB internal flash memory card இணைக்கப்பட்டுள்ளது. அதில் 1000fps, 1920x1080  பிக்சல் ரேஷியோவில் படம் எடுத்தால் 4 நொடிக்கு பிம்பத்தை சேமிக்கலாம். அதாவது 4400 frames.
அதுவே 500fps என்றால் 8 நொடியும், 250fps என்றால் 16 நொடியும் சேமிக்கலாம்.




'CineMag' என்னும் 'Hard disc' 512GB -இல் கிடைக்கிறது. இதை கேமராவோடு இணைத்துக்கொள்ளலாம். இதில் 66 நிமிடம் பிம்பங்களை சேமிக்கமுடியும். வேறு கொள்ளவும் கொண்ட Hard disc -கும் கிடைக்கிறது.






Phantom CineStation என்னும் கருவியின் மூலம், 'CineMag'-இருந்து தகவல்களை நாம் நம் எடிட்டிங் கணினிக்கும், சேமிக்கும் Hard disc-க்கும் மாற்றிக்கொள்ளலாம்.


இந்த கேமராவில் சில வகைகள் உண்டு.


Phantom 65 - 65mm  வகைக்கேமரா
Phantom HD GOLD - New version கேமரா.


இந்தக் கேமரா இங்கு சென்னையில் இருப்பதாக தகவல். மும்பையில் வாடகைக்கு கிடைக்கிறது.